For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரியாத்தில் உருவாகும் ''பொழுதுபோக்கு நகரம்''.. சவுதியின் முகத்தை மாற்றும் முகமது பின் சல்மான்

சவுதி அரேபியாவில் பெரிய அளவில் ''பொழுதுபோக்கு நகரம்'' ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ரியாத்தில் உருவாகும் பொழுதுபோக்கு நகரம்..

    ரியாத்: சவுதி அரேபியாவில் பெரிய அளவில் ''பொழுதுபோக்கு நகரம்'' ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது. ரியாத் அருகே இந்த நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் சவுதி நிறைய விஷயங்களில் முன்னேற்றம் அடையும் என்று கூறப்படுகிறது.

    சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதேபோல் பெண்களுக்கு லைசன்ஸ் வழங்கப்பட்டது. தற்போது அதிரடியாக அந்த நாடு பல விஷயங்களை மாற்ற இருக்கிறது. அமெரிக்கா போல மாறும் நோக்கத்தில் செயல்பட்டு வளர்கிறது.

    வருமான இழப்பு

    வருமான இழப்பு

    இவ்வளவு நாட்களாக சவுதி எண்ணெயில் இருந்து வரும் வருவாயின் மூலம் மட்டுமே சம்பாதித்து கொண்டு இருந்தது. சவுதி தனது 90 சதவிகித வருவாயை எண்ணெய் மூலம் சம்பாதித்தது. ஆனால் கடந்த 2014ல் எண்ணெய் விலை குறைந்த காரணத்தால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. இதனால் வரிவிதிப்பு முறை கூட அறிமுகப்படுத்தப்பட்டது.

    பொழுதுபோக்கு நகரம்

    பொழுதுபோக்கு நகரம்

    ஆனால் இதன் மூலம் வரும் வருவாயும் சவுதி அரசுக்கு போதவில்லை. இதனால் தற்போது சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ''பொழுதுபோக்கு நகரம்'' ஒன்றை உருவாக்க இருக்கிறார். இன்னும் சில வருடங்களில் இந்த நகரம் மொத்தமாக கட்டி முடிக்கப்படும். ரியாத்தின் மேற்கு பகுதியில் ஒரு பகுதி முழுக்க இது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட புதிய நகரத்தை உருவாக்க இருக்கிறார்கள். இதன் மூலம் அதிக வருவாய் பெற திட்டமிட்டுள்ளனர்.

    என்ன விஷயம் இருக்கும்

    என்ன விஷயம் இருக்கும்

    இந்த நகரம் குட்டி நியூயார்க், சிங்கப்பூர், மலேசியா போல இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரிய அளவில் இதனுள் இஸ்லாமிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. இதனால் பெரிய மால்கள் தொடங்கி, தீம் பார்க், தியேட்டர் என்று முழுக்க முழுக்க மக்களின் கொண்டாட்டத்திற்கான எல்லாம் நிறைந்து இருக்கும். இதை வைத்து அந்நாட்டின் வருவாயை பெரிய அளவில் ஈடுகட்டலாம் என்று கூறியுள்ளனர்.

    மாஸ் திட்டம்

    மாஸ் திட்டம்

    ஆனால் சல்மான் இதோடு அவரது திட்டத்தை முடித்துக் கொள்ளவில்லை. ''விஷன் 2030'' என்று பெரிய திட்டத்தை அவர் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார். இவ்வளவு நாள் இயற்கை வளங்களை வைத்து வளர்ந்த அந்த நாடு இனி தொழில்நுட்பங்கள் பக்கம் இறங்க உள்ளது. டெக்கனிக்கல் சிட்டி, ஐடி கம்பெனி என நிறைய தொழில்நுட்ப விஷயங்களை அந்த நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளது.

    English summary
    Saudi Arabia has decided to open its ''Entertainment City'' for more income. Saudi crown prince Mohammed Bin Salman propesed this idea for new revolution.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X