For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதி அரேபியா அடுத்த அதிரடி.. விளையாட்டு மைதானங்களுக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி

அடுத்த வருடம் முதல், ரியாத்திலுள்ள, கிங் பஹ்த் ஸ்டேடியம், ஜெட்டாவிலுள்ள கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் டம்மம் பகுதியிலுள்ள இளவரசர் முகமது பின் பஹ்த் ஸ்டேடியம் ஆகியவற்றில் பெண்களும் அனுமதிக்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவின் குறிப்பிட்ட ஸ்டேடியங்களில் இனி பெண்களும் விளையாட்டு போட்டிகளை கண்டு களிக்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சம உரிமை அளிப்பதில், பல்வேறு மாற்றங்களை சவுதி அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த உத்தரவும் பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவில் சில விதிமுறைகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. பெண்கள் தங்கள் ஆண் பொறுப்பாளர் அனுமதி இன்றி, தனியாக பயணிக்கவோ, மணம் முடிக்கவோ, விவாகரத்து செய்யவோ, திட்டமிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவோ முடியாது.

ஆண்களோடு கலந்து பழக முடியாது

ஆண்களோடு கலந்து பழக முடியாது

சவுதியில் பெண்கள் எதிர்பாலினத்தவரோடு கலந்து பழக முடியாது. பொது இடங்களில் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளைதான் அணிய வேண்டும். இந்த நிலையில்தான், எதிர்பாலினத்தவரோடு கலந்து பழக வாய்ப்புள்ள விளையாட்டு மைதானங்களுக்கும் பெண்களை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இளவரசரின் திட்டம்

இளவரசரின் திட்டம்

சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், 'விஷன் 2030' என்ற பெயரில் தீட்டியுள்ள தொலை நோக்கு திட்டத்தின் ஒரு பகுதிதான் பெண்களுக்கு சம உரிமை அளிப்பதும் ஆகும். சவுதி வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்யவும் அரசு முயற்சிகள் எடுக்கிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த செப்டம்பரில் கிங் பஹ்த் ஸ்டேடியத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டதும் இதன் ஒரு அங்கம்தான்.

முக்கிய ஸ்டேடியங்கள்

முக்கிய ஸ்டேடியங்கள்

இந்த நிலையில்தான் அடுத்த வருடம் முதல், ரியாத்திலுள்ள, கிங் பஹ்த் ஸ்டேடியம், ஜெட்டாவிலுள்ள கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் டம்மம் பகுதியிலுள்ள இளவரசர் முகமது பின் பஹ்த் ஸ்டேடியம் ஆகியவற்றில் பெண்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதுவரை இந்த மைதானங்களில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த உத்தரவு காரணமாக, குடும்பத்தோடு விளையாட்டை கண்டு களிக்க முடியும் என்று சவுதி விளையாட்டுத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சம உரிமை

சம உரிமை

குறிப்பிட்ட இந்த மைதானங்களில் பார்வையாளர்கள் அதிக அளவில் அமர வசதி உள்ளது. இதனால்தான் இந்த மைதானங்களில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சவுதியில் பெண்களும் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Starting in early 2018, women will be allowed into three arenas in major cities, according to a statement issued Sunday by the General Sport Authority, the country's governing body for sports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X