For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அழிவை நோக்கி செல்லும் சவுதியின் ''கேஜிஎப்''.. முடிவை நெருங்கும் பிரம்மாண்ட எண்ணெய் சுரங்கம்!

சவுதியை ஒரு காலத்தில் தூக்கி நிறுத்திய மிக முக்கிய எண்ணெய் வளம் மிகுந்த பகுதியான காவர் தற்போது பெரிய எண்ணெய் வறட்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    முடிவை நெருங்கும் பிரம்மாண்ட எண்ணெய் சுரங்கம்!- வீடியோ

    ரியாத்: சவுதியை ஒரு காலத்தில் தூக்கி நிறுத்திய மிக முக்கிய எண்ணெய் வளம் மிகுந்த பகுதியான காவர் தற்போது பெரிய எண்ணெய் வறட்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    ஒருகாலத்தில் அந்த இடம் சவுதியின் ரகசியமான பொக்கிஷமாக பார்க்கப்பட்டது. உலக நாடுகள் அந்த இடத்தை எப்படியாவது அடைந்து விட முடியாதா என்று கனவு கண்டது.

    அமெரிக்கா ராணுவத்தை அனுப்பி அந்த இடத்தை கைப்பற்றிவிடக்கூடாதா என்று கூட திட்டம் போட்டது. சவுதியின் காவர் பகுதி உலகம் முழுக்க பெரிய கவனத்தை ஈர்த்த எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதி ஆகும். உலகில் இங்கிருந்துதான் அதிகமான எண்ணெய் எடுக்கப்பட்டு வந்தது.

    இது தேவையா.. ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம் இது தேவையா.. ஆயிரக்கணக்கான பிரதிகள்.. 2 லட்சம் பிடிஎப்.. ஒரே நாளில் விற்று தீர்ந்த ரபேல் புத்தகம்

    பெரிய இடம்

    பெரிய இடம்

    சவுதியின் திடீர் பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இந்த காவர் மிக மிக முக்கியமான காரணமாக இருந்தது. சவுதியை தற்போது உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றியதில் இந்த காவர் பகுதிக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் இப்போது வாழ்ந்து கெட்ட ஜமீன்தார் போல இந்த பகுதி மாறியுள்ளது.

    ஏன் மோசம்

    ஏன் மோசம்

    இங்கு நாளுக்கு நாள் எண்ணெய் வளம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம்தான் இங்கு மிக மிக குறைவாக எண்ணெய் எடுக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து எண்ணெய் வளம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு சரிந்து கொண்டே வருகிறது.

    என்ன வேகம்

    என்ன வேகம்

    உலகம் முழுக்கவே எண்ணெய் வள நாடுகள் இந்த சரிவை சந்தித்துக் கொண்டு உள்ளது. சமீபத்தில் கத்தார் கூட எண்ணெய் வள நாடுகளின் பட்டியலில் இருந்து அதிரடியாக வெளியானது. அப்போதே எண்ணெய் வள நாடுகள் மாற்று எரிபொருள் உற்பத்திற்கான பாதைகளை உருவாக்க தொடங்கியது. இப்போது காவர் பகுதியும் காலியாகும் நிலைக்கு சென்றுள்ளது.

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    இந்த வருடம் காவர் பகுதியின் எண்ணெய் உற்பத்தி வருடா வருடம் 2 சதவிகிதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு. இங்கு வருடா வருடம் 5 சதவிகிதம் வரை எண்ணெய் உற்பத்தி குறைத்து கொண்டே வருகிறது. இது அங்கு இருக்கும் பொருளாதார நிபுணர்கள் கொஞ்சம் கூட எண்ணிப்பார்க்காத அதீத வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    எவ்வளவு மில்லியன்

    எவ்வளவு மில்லியன்

    இப்போதெல்லாம் 3.8 மில்லியன் பேரல்கள் மட்டுமே ஒரு நாளைக்கு காவர் பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது . சென்ற வருடம் வரை 5 மில்லியனுக்கும் அதிகமாக எடுக்கப்பட்ட பேரல்கள் ஒரேயடியாக சில நாட்களில் இவ்வளவு வேகமாக குறைந்து இருக்கிறது. இதை தொடர்ந்து இப்படியே குறைந்து கொண்டே செல்லும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

    அச்சம்

    அச்சம்

    இது சவுதி அரசை பெரிய அளவில் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. எண்ணெய் பொருட்களின் விலை குறைவால் சவுதி ஏற்கனவே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பொருளாதார பாதிப்பை போக்க சவுதி என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

    English summary
    Saudi Arabia's biggest oil field is running out of oil in its utmost speed than anyone guessed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X