For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டு போடுறாங்க... எங்க நாட்டை காப்பாற்றுங்க.. தென்கொரியாவிடம் அவசர உதவி கேட்ட சவுதி இளவரசர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து-வீடியோ

    ரியாஸ்: சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கிணற்றில் கிளர்ச்சியாளர்கள் குண்டு போட்டு தாக்குதல் நடத்திய நிலையில் அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான், வான் பாதுகாப்பு எல்லையை பாதுகாக்க உடனடியாக தென்கொரியாவிடம் உதவி கோரியிருக்கிறார்.

    சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையமான அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஹவுத்தி கிளாச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் அண்மையில் தாக்குதல் நடத்தினர்.

    இதேபோல் சவுதியின் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.

    எண்ணெய் உற்பத்தி பாதிப்பு

    எண்ணெய் உற்பத்தி பாதிப்பு

    இந்த இரண்டு தாக்குதல்கள் காரணமாக சவுதியில் 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. அதாவது தினசரி 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

    விலை கடுமையாக உயர்வு

    விலை கடுமையாக உயர்வு

    இதனால் சர்வதே அளவில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுதி அரேபியா தனது வான் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க தென்கொரியாவின் உதவியை நாடியுள்ளது.

    பாதுகாக்க வேண்டும்

    பாதுகாக்க வேண்டும்

    சவுதி அரேபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சவுதி நாட்டு வான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட தென்கொரியா அதிபர், சவுதியை பாதுகாக்க ஒத்துழைப்பதாக தெரிவித்தார்.

    உலகுக்கே அச்சுறுத்தல்

    உலகுக்கே அச்சுறுத்தல்

    அப்போது பேசிய தென் கொரிய அதிபர் மூன் ஜே எண்ணெய் கிடங்குகளை குறி வைத்து நடத்தபட்ட தாக்குதல்கள் சவுதி அரேபியாவுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.. இந்த பிரச்சனையை உலக நாடுகள் இணைந்து தீர்க்கவேண்டும் என்றார்.

    சவுதி இளவரசர் கோரிக்கை

    சவுதி இளவரசர் கோரிக்கை

    இந்த உரையாடலின் போது பேசிய சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி வான் எல்லைகளை ஏவுகணை தாக்குதல் உள்பட அனைத்து விதமான வான்வெளி அச்சுறுத்தல்களிடமிருந்து பாதுகாக்க ஏவுகணை தடுப்பு கவன்களை தென் கொரியா வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    Saudi Arabia’s crown prince Mohammed bin Salman has requested help from South Korea to strengthen the country’s air defense system after attacks on two oil plants
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X