ஹஜ் யாத்திரையில் தொடரும் சோகங்கள்... கடுப்படுத்த முடியாத விபத்துக்களும், உயிர்ப் பலிகளும்..
மெக்கா : ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் யாத்திரைக்காக குவியும் இஸ்லாமியர்களை நிர்வகிப்பதில் சவுதி அரேபிய அரசுக்கு கடும் சவால்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை தொடர்பான விபத்துகள், துயர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மெக்கா, மெதீனா புனித ஸ்தலம் ஒவ்வொரு ஆண்டும் துயர சம்பவங்கள் நிகழும் இடமாக மாறி வருவது குறித்து சவுதி அரேபிய அரசு கவலையடைந்துள்ளது.

துயரங்களைத் தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருகிறது. செப்டம்பர் 11-ம் தேதி மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் உயரிழந்த சோக சம்பவம் அடங்குவதற்குள் அங்கு மீண்டும் ஒரு விபத்து நிகழ்ந்து விட்டது.
இதற்கு முன் நிகழ்ந்த விபத்துக்கள்...
1990: ஹஜ் யாத்திரையின் மிக மோசமான துயரச் சம்பவம் என்று வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 1,426 பேர் பலியாகினர். மெக்காவில் உள்ள புனிதத் தலத்துக்கு செல்லும் நடைவாசிகளுக்குரிய சுரங்கப்பாதையில் நெரிசல் ஏற்பட்டு 1426 பேர் பலியாக, ஏராளமானோர் காயமடைந்தனர்.
1994: மினாவில், கல்லெறியும் சடங்குக்காக கூட்டம் சேர்ந்த போது ஏற்பட்ட நெரிசலில் 270 பேர் உயிரிழந்தனர்.
1997: மினாவில் ஹஜ் யாத்திரீகர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 340 யாத்ரீகர்கள் பலியாகினர். கடும் காற்றினால் தீ பரவியதில் மேலும் 1,500 பேர் காயமடைந்தனர்.
1998: மினாவில் புனிதச் சடங்கு தருணத்தில் மேம்பாலம் ஒன்றின் மீது சென்று கொண்டிருந்த போது பதட்டத்திலும் நெரிசலிலும் சிக்கி மேம்பாலத்திலிருந்து விழுந்து சுமார் 180 பேர் பலியாகினர்.
2004: மினாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் பல யாத்திரிகர்கள் சிக்கினர். இதில் கடைசி நாளில் 244 பேர் பலியாகி, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
2006: மினாவின் பாலைவனச் சமவெளியில் நெரிசலில் சிக்கி 360 பேர் பலியாகினர். அந்த ஆண்டு ஹஜ் யாத்திரை தொடங்குவதற்கு முதல் நாள் மெக்காவில் உள்ள 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 73 பேர் பலியாகினர்.
2015: செப்டம்பர் 11-ம் தேதி மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் உயரிழந்தனர். மீண்டும் இதே மாதத்தில் நேற்று மினாவில் சாத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் 750 பேர் உயிரிழந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications