For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல மாத ஸ்கெட்ச்.. திட்டமிட்டு கொல்லப்பட்ட ஜமால்.. சவுதிக்கு அமெரிக்கா மிரட்டல்.. போர் உருவாகிறதா?!

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாயமான பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட சவூதி - வீடியோ

    இஸ்தான்புல்: பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது உலக நாடுகள் இடையே போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

    அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. இவர் சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.

    இது எண்ணெய் வள நாடுகள் இடையே பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அடுத்த என்ன நடக்கும் என்ற அச்சத்தை இந்த மரணம் உருவாக்கி உள்ளது.

    லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. பொறுப்பாளர்கள் நியமனம்.. அடேங்கப்பா வியூகம் வகுக்கும் ஸ்டாலின் லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. பொறுப்பாளர்கள் நியமனம்.. அடேங்கப்பா வியூகம் வகுக்கும் ஸ்டாலின்

    துருக்கி வந்தார்

    துருக்கி வந்தார்

    சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர். பின் லேடனை 4க்கும் அதிகமான முறை இவர் பேட்டி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் வசித்து வந்த இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அதுகுறித்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று இவர் அங்கு சென்றுள்ளார்.

    காணவில்லை

    காணவில்லை

    அந்த அலுவலகம் உள்ளே போனவர் வெளியே வரவேயில்லை. அப்படியே காணமல் போனார். கடந்த இரண்டு வாரமாக இவரை உலக நாடுகள் தேடி வந்தது. இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வந்தது. இந்த நிலையில் இவர் அந்த தூதுரகத்திலேயே வைத்து சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.

    ஏன் கொலை

    ஏன் கொலை

    இவரை கொலை செய்ய சவுதி 8 மாதமாக திட்டமிட்டு வந்தது. கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார். அவரின் தவறான ஆட்சி முறையை குறித்தும் அவரின் பின்னணி குறித்தும் எழுதினார். இதற்காகவே இவர் கொலை செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. தற்போது அதேபோல் கொல்லப்பட்டுள்ளார்.

    நேரடியாக தலையிட்டுள்ளார்

    நேரடியாக தலையிட்டுள்ளார்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கொலையில் சவுதி முடி இளவரசர் முகமது சல்மானுக்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று சவுதி பத்திரிக்கைகளே குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. அவரின் நேரடி உத்தரவின் பேரில்தான் இந்த கொலை நடந்து இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

    கொலைகார கும்பல்

    கொலைகார கும்பல்

    ஜமாலை கொலை செய்ய 20 பேர் கொண்ட கொலைகாரப்படை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். இந்த கொலைக்கு காரணமான நபர்கள் என்று மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சவுதி உலக நாடுகளை ஏமாற்ற இந்த கைதை செய்கிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

    துருக்கி வெளியிடும்

    துருக்கி வெளியிடும்

    இந்த நிலையில்தான் புதிய திருப்பமாக இந்த கொலையில் முக்கியமான ஆதாரங்களை எல்லாம் வெளியிட போகிறோம் என்று துருக்கி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த கொலை எப்படி திட்டமிடப்பட்டது, எப்படி நடந்தது, சவுதி எப்படி மறைக்க முயற்சித்தது என்று அனைத்தையும் வெளியிட போவதாக துருக்கி தெரிவித்து உள்ளது. இது சவுதிக்கு பெரிய அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

    அமெரிக்கா பாய்ச்சல்

    அமெரிக்கா பாய்ச்சல்

    இந்த நிலையில் அமெரிக்கா இப்படி ஒரு குடுமிக்குத்தான் காத்திருந்தது என்று கூட கூறலாம். சவுதிக்கு எதிராக செயல்பட கடந்த சில மாதங்களாக தீவிர திட்டத்தில் இருந்து அமெரிக்கா, இதை கையில் எடுத்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த கொலையை தொடர்ந்து வெறும் 24 மணி நேரத்தில் இரண்டு முறை சவுதிக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்டுவிட்டார். இதுதான் தற்போது போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

    என்ன நடக்க போகிறது

    என்ன நடக்க போகிறது

    ஜமால் கொலை காரணமாக பின்வரும் சம்பவங்கள் நடக்கலாம்.

    1. சவுதி மீது அமெரிக்கா எதாவது நடவடிக்கை எடுக்கலாம்.

    2. சவுதியில் இப்போதே கிளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரிகிறது. ஏற்கனவே சல்மான் மீது கோபத்தில் இருக்கும் அடிப்படைவாத அமைப்புகள் அவருக்கு எதிராக தீவிரமாக களமிறங்கலாம்.

    3. துருக்கி சவுதிக்கு எதிராக களமிறங்கினால் மற்ற அரபு நாடுகளும் சவுதிக்கு எதிராக நிலைப்பாடு எடுக்க வாய்ப்புள்ளது.

    English summary
    Saudi Journo Jamal Khashoggi murder creates ruckus around the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X