For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதயில் மீதமான உணவு பொருட்கள் ஏழைகளுக்கு கிடைக்க தெருவில் ஃப்ரிட்ஜ்

Google Oneindia Tamil News

சவுதி: மீதமான உணவு பொருட்கள் பசியால் வாடுபவர்களுக்கு கிடைக்கும் வகையில் சவுதியில் ஒருவர் தனது வீட்டுக்கு வெளியே தெருவில் குளிர்சாதன பெட்டி வைத்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகில் மனிதர்கள் வசதியாகவும், நடுத்தரமாகவும், ஏழையாகவும், மிகவும் ஏழையாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு புறம் செல்வம் படைத்தவர்கள் வயிராற உண்ட பிறகு மீதமுள்ள உணவை குப்பைத் தொட்டியில் எறியும் அவலம் நடக்கிறது. மறுபுறம் ஏழைகள் உண்ண உணவின்றி பசியால் துடிக்கின்றனர்.

ஆனால் நாம் தேவையான அளவுக்கு சாப்பிட்ட பின்பு மீதமுள்ள உணவு பொருட்களை வீணாக குப்பைத் தொட்டியில் எறிவதற்கு பதில், உணவில்லாத ஏழைகளுக்கு கொடுத்து உதவும் வகையில் தனது வீட்டுக்கு முன்பாக ஒரு குளிர்சாதன பெட்டியை வைத்துள்ளார் சவுதியைச் சேர்ந்த ஒருவர்.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் மீதமுள்ள உணவுகளை கொண்டு வந்து இந்த குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் வைக்கும் உணவு பொருட்களை பசியால் வாடுவோர் வந்து எடுத்து சாப்பிடுகின்றனர்.

English summary
A Saudi man has kept a fridge in the road so that people can leave the left over there which can be eaten by the poor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X