For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் பயணிகளிடம் கட்டுப்பாடு இல்லாததே விபத்துக்குக் காரணம்... சவுதி அமைச்சர் பேட்டி

Google Oneindia Tamil News

சவுதி : மினாவில் ஹஜ் புனித யாத்திரையின் போது பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு 717 பேர் பலியானதற்கு யாத்திரிகர்களிடம் கட்டுப்பாடு இல்லாததே காரணம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் கலீத் அல்-ஃபாலி தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது...

meccaaccident

யாத்திரிகர்கள் எங்களது அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கடைபிடித்திருந்தால் நிச்சயம் இத்தகைய பெருந்துயரம் நிகழ வாய்ப்பில்லை. நாங்கள் கால-அட்டவணை அமைத்துக் கொடுத்தோம், ஆனால் அவர்கள் அதன் படி நடக்கவில்லை. இதுதான் இத்தகைய பெரும் விபத்துக்கு மூல காரணம்.

எங்களது கால-அட்டவணைப்படி அவர்கள் சென்றிருந்தால் நிச்சயம் இத்தகைய விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியதே என்று கூறியுள்ளார்.

விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முகமது பின் நயீஃப் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

English summary
Saudi Arabia's health minister blamed undisciplined pilgrims for the deadly stampede Thursday during the hajj, saying the tragedy would not have occurred if they "had followed instructions".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X