For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவூதியில் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தை தடுக்க புதிய சட்டம்

By Siva
Google Oneindia Tamil News

Saudi moves to curb child marriage
சவூதி: சவூதியில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் பொருட்டு புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.

முஸ்லிம் நாடான சவூதி அரேபியாவில் குழந்தை திருமணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டம் எழுதப்பட்டுள்ளதாம்.

இந்த சட்டம் குறித்து விரைவில் அந்நாட்டு நாடாளுமன்றமான ஷுராவில் விவாதம் நடத்தப்பட உள்ளது. பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக ஆக்கப்படவிருக்கிறது. இந்த புதிய சட்டத்தின்படி நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பெற்றோர் தங்களது மைனர் மகள்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முடியாது.

மேலும் இந்த புதிய சட்டத்தின்படி கணவர் இரண்டாவது மனைவி வைத்திருந்தால் முதல் மனைவி அவரை விவாகரத்து செய்யும் உரிமை அளிக்கப்படுமாம். இது தவிர இந்த சட்டத்தின்படி அறிஞர்கள் நீதிமன்ற உத்தரவின்றி திருமணம் செய்து வைக்க முடியாது. தனது மகள் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால் அந்த தந்தை திருமணம் குறித்து முடிவு செய்யலாம். மேலும் தன்னுடைய மகள் மனதாலும், உடலாலும் திருமணம் செய்ய தகுதியானவர் என்று மருத்துவரிடம் அறிக்கை வாங்க வேண்டும்.

English summary
Saudi government has drafted a new law to curb child marriages in the kingdom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X