For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவிற்கான சவுதி தூதர்.. முதல்முறையாக பெண் நியமனம்.. முடி இளவரசர் சல்மான் அசத்தல்!

அமெரிக்காவிற்கான சவுதி அரேபியாவின் முதல் பெண் தூதராக ரிமா பித்த பாந்தர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Google Oneindia Tamil News

ரியாத்: அமெரிக்காவிற்கான சவுதி அரேபியாவின் முதல் பெண் தூதராக ரிமா பித்த பாந்தர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்காவின் சவுதி தூதராக இருந்த இளவரசர் காலித் பின் மாற்றப்பட்டுள்ளார்.

இரவோடு இரவாக இந்த அதிரடி நிகழ்ந்து இருக்கிறது. பத்திரிக்கையாளர் ஜமாத் கசோக்கி கொலைக்கு பின் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டடார்

கொல்லப்பட்டடார்

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரசாங்கத்தால் கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்கா, சவுதி உறவில் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டது.

என்ன பொறுப்பு

என்ன பொறுப்பு

பத்திரிகையாளர் ஜமால் காசோக்கி கொலை காரணமாக அமெரிக்காவில் உள்ள சவுதி தூதர் காலித் பின்னிற்கு எதிராக நிறைய எதிர்பலைகள் இருந்தது. இதையடுத்து தற்போது இவர் மாற்றப்பட்டு இருக்கிறார். இளவரசர் காலித் பின் சல்மானுக்கு தற்போது துணை பாதுகாப்பு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

என்ன செய்கிறார்

என்ன செய்கிறார்

புதிதாக தூதுவராக நியமிக்கப்பட்டு இருக்கும் இளவரசி ரிமா பித்த பாந்தர், சவுதியில் பெண்களுக்காக போராடும் வழக்கறிஞர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது பின் சல்மான் சமீப காலமாக பெண்களுக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வருவதற்க்கு பின்னில் இவரது ஐடியாதான் இருக்கிறது என்கிறார்கள். இவரது அப்பாவும் அமெரிக்காவின் தூதராக இருந்துள்ளார்.

பெண் பாராட்டு

பெண் பாராட்டு

இந்த நிலையில் அமெரிக்காவின் முதல் சவுதி பெண் தூதராக ரிமா பித்த பாந்தர் நியமிக்கப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து பெண் விடுதலைக்காக நிறைய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் சல்மான், அமெரிக்காவிற்கு தூதராக பெண் ஒருவரை நியமித்து இருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
Saudi Crown Prince Salman named a Princess as the new envoy for the USA for the first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X