For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யூத எதிர்ப்பு கருத்துகள் அவுட்.. பெண்கள் முன்னேற்றம் உள்ளே..சவுதி அரசின் அட்டகாசமான சீர்திருத்தங்கள்

Google Oneindia Tamil News

பெய்ரூட்: சவுதி அரேபியா பாடத்திட்டத்தில் யூத எதிர்ப்பு கருத்துகளும் மாற்று மத கருத்துகளும் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பெண்கள் முன்னேற்றம் போன்ற சீர்திருத்தக் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கிய நாடு சவுதி அரேபியா. தற்போது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசாக முகமது பின் சல்மான் உள்ளார். அவரது பதவிக்காலத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுவாக, சவுதி அரேபியா பாட புத்தகத்தில் யூத எதிர்ப்பு, ஷியா இஸ்லாமியர்கள் எதிர்ப்பு உள்ளிட்ட கருத்துகள் அதிகமா இடம் பெற்றியிருக்கும். இதுபோன்ற கருத்துகளைச் சவுதி அரசு பாடபுத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று அமெரிக்க போன்ற நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கம்

சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கம்

இந்நிலையில், இந்தாண்டு வெளியாகியுள்ள சவுதி அரேபியா பாடத்திட்டத்தில் யூத எதிர்ப்பு கருத்துகளும், ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளும் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல தன்பால் ஈர்பாளர்களுக்கு மரண தண்டை விதிக்க வேண்டும் என்பது போன்ற கருத்துகளும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஜிகாதிகள் குறித்து இருந்த சில பக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.

சில கதைகள் தொடர்கின்றன

சில கதைகள் தொடர்கின்றன

அதற்காக அனைத்துச் சர்ச்சைக்குரிய கதைகளும் நீக்கப்பட்டுவிட்டன எனக் கூற முடியாது. இன்னும்கூட ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் குறித்த மோசமான கருத்துகள் பாடங்களில் உள்ளன. இது குறித்து வாசிங்டனிலுள்ள சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குநர் டேவிட் வெயின்பெர்க் கூறுகையில், "கிறிஸ்துவர்கள், யூதர்கள், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நரகத்திற்குச் செல்லிருந்த யூத சிறுவனைக் கடவுள் காப்பாற்றியதும், அவன் இஸ்லாத்திற்கு மாறுவது போன்ற சில கதைகள் பாடப் புத்தகத்தில் தொடர்கிறது" என்றார்.

வரைபடத்தில் கூட இல்லை

வரைபடத்தில் கூட இல்லை

தற்போது வரை சவுதி அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லை. சவதி பாடப்புத்தகத்தில் பாலஸ்தீனிய ஆதரவு கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. சில யூத எதிர்ப்பு கதைகள் இடம்பெற்றுள்ள அதே நேரத்தில், பாடப்புத்தகத்தில் உள்ள எந்த வரைபடங்களிலும் இஸ்ரேல் என்ற பெயர்கூட குறிப்பிடப்படவில்லை. இஸ்ரேலுக்கு எதிராகச் சமீப காலங்களாக மென்மையான நடைமுறையையே சவுதி கடைப்பிடித்து வந்தாலும், பாடபுத்தகத்தில் இஸ்ரேல் எதிர்ப்பு கருத்துகளை நீக்கப் பல காலம் ஆகும் என்று டேவிட் வெயின்பெர் தெரிவித்தார்.

நல்ல முன்னேற்றம்

நல்ல முன்னேற்றம்

யூத எதிர்ப்பு போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலான பெண்கள் முன்னேற்றம் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு உரிய கல்வி வழங்கப்பட்டு அவர்கள் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்பது போன்ற கருத்துகள் இடம் பெற்றுள்ளன. சவுதி அரேபியாவில் தற்போதுள்ள பாடப் புத்தகங்கள் சிறந்தவையாக இல்லை என்றாலும், கடந்த கால பாட புத்தகங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிட தகுந்த அளவுக்குச் சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கப்பட்டு, சீர்திருத்தக் கருத்துள் சேர்க்கப்பட்டுள்ளதாக டேவிட் வெயின்பெர் தெரிவித்தார்

English summary
Saudi Arabia has been sharply criticized over the decades for school textbooks that preach women's subservience to men, anti-Semitism and a general enmity toward religions other than Islam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X