For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைநகரை தாக்க வந்த ஏவுகணை.. கெத்தாக தாக்கி அழித்த சவுதி!

தலைநகரை நோக்கி வந்த ஏவுகணையை சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சவுதியை தாக்க வந்த ஏவுகணையை இடைமறித்து அளித்து அசத்தல்

    ரியாத்: தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணையை சவுதி ராணுவம் இடைமறித்து தாக்கி அழித்து இருக்கிறது. இதை ஹவுதி போராளி குழு ஏவியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. அனைத்து இடங்களிலும் ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் ரேடார் கண்காணிப்பு கருவிகள் முழுவீச்சில் கண்காணிக்க தொடங்கியுள்ளது. அனுமதி இல்லாமல் நாட்டிற்குள் பறக்கும் அனைத்து பொருட்களையும் தாக்கி அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஹவுதிக்கள்

    ஹவுதிக்கள்

    ஏமனில் இருக்கும் ஹவுதி என்று போராளி குழுவின் முக்கிய எதிரி சவுதிதான். இந்த போராளி குழு கடந்த சில வருடங்களாக ஏமனில் பெரிய அளவில் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது சவுதியுடன் போரிட்டு வருகிறது.

    ஈரான்

    ஈரான்

    இந்த குழுவிற்கு ஈரான் உதவி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் தற்போது சவுதி நேரடியாகவே இந்த குற்றச்சாட்டை வைத்து இருக்கிறது. தற்போது இது ஈரானுக்கு பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

    விமான நிலையம்

    விமான நிலையம்

    ஏற்கனவே இந்த குழு சவுதியை தாக்க முயற்சி எடுத்து இருந்தது. தற்போது மீண்டும் சவுதி தலைநகர் ரியாத்தில் இருக்கும் கிங் காலித் விமான நிலையத்தை தாக்க முயன்று இருக்கிறது. ஆனால் ஹவுதி குழு அனுப்பிய ஏவுகணையை பாதி வழியிலேயே மறித்து சவுதி செயலிழக்க வைத்து இருக்கிறது.

    அசம்பாவிதம் தவிர்ப்பு

    அசம்பாவிதம் தவிர்ப்பு

    இதனால் பெரிய பாதிப்பில் இருந்து சவுதி தப்பியுள்ளது. இதனால் எந்த கட்டிடமும் இடிபாடுகளுக்கு உள்ளாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் காயம், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    Saudi Arabia shoots down Houthi's missile. It is a Yemeni ballistic missile. No casualties in this attack. Details on the loss also not came out yet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X