For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டிக்கபோகும் மணமகன் பத்தி சொல்லியே ஆகணும் – சவுதியில் பெண்கள் போர்க்கொடி

By Siva
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதியில் திருமணத்திற்கு முன்னதாகவே ஆண்களைப் பற்றிய முழுவிவரங்களும் சொல்லப்பட வேண்டும் என்று பெண்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் தங்களது கணவரின் இளமைக்கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை கேள்விப்படும் சில பெண்கள் விவாகரத்துக்கு செல்வதால் சவுதியில் தற்போது விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன.

Saudi women seek right to have information on future husbands

இதை தவிர்க்கும் வகையில் திருமணத்துக்கு முன்னதாகவே தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் உரிமை வேண்டும் என சவுதியில் உள்ள இளம்பெண்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதற்கு சவுதி அரசு அனுமதி அளித்து விட்டால் அரபு நாடுகளில் பெண்களுக்கு இவ்வகை உரிமையை அளித்த முதல் நாடாக சவுதி அரேபியா விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர்.

English summary
Saudi young women demand to have law to obtain information on their husbands-to-be. A number of young women say they want to have access to the security, health and legal files of the proposing man before signing the marriage contract.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X