For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதியில் குட்டைப் பாவாடையுடன் வலம் வந்ததற்காக இளம் பெண் கைது!

சவுதியின் ஆடைக்கட்டுப்பாடுகளை மதிக்காமல் குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு பொது இடங்களில் சுற்றி வந்த பெண்மணி கைது செய்யப்பட்டார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ரியாத் : இஸ்லாமிய ஆடைக்கட்டுப்பாடுகளுக்கு எதிராக சவுதி அரேபியாயில் குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு பொது இடத்தில் சுற்றும் பெண், வெளியிட்ட வீடியோவே அவருக்கு எதிரான சாட்சியாக மாறி கைது நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் நாடுகளில் முக்கியமான நாடு சவுதி அரேபியா. இங்கு புகழ்பெற்ற புராதான இடம் மற்றும் பாலைவனத்தில் பெண் ஒருவர் குட்டைப்பாவாடை அணிந்து வலம் வரும் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தார்.

 Saudia arabian woman arrested for wearing half shirts

சவுதி தலைநகர் ரியாத்தில் இருந்து 90 மைல்கள் தூரத்தில் உள்ளது உஷேகர் கிராமம். இங்குள்ள கோட்டை வாசலில் பெண்மணி ஒருவர் குட்டைப்பாவாடையுடன் வலம் வரும் காட்சியை அவரே படம்பிடித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் போட்டிருந்தார்.

Recommended Video

    Saudi woman arrested wearing mini-skirt and crop top, Watch video | Oneindia News

    வைரலான குட்டைப்பாவாடை பெண்மணி

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த தகவலை சவுதி அரேபிய டிவி ஒன்று டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகியது.

    கண்டனங்கள்

    சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தும் அந்த நாட்டு மக்களிடையே இது மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது. மேலும் அந்தப் பெண்ணிற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்ததோடு, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் வீடியோவில் இருக்கும் பெண்மணியை ரியாத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது

    இஸ்லாமிய சட்டவிதிகளுக்கு எதிராக ஆடை அணிந்து கொண்டு பொது இடத்தில் சுற்றிய குற்றத்திற்காக அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுதி ஆடைக்கட்டுப்பாட்டு விஷயத்தில் எந்த அளவு கட்டுக்கோப்பாக இருக்கிறது என்பதற்கான உதாரணம் என்ன தெரியுமா?

    டிவியில் கூட போடவில்லையாம்

    இந்த செய்தியை வெளியிட்ட போது கூட குட்டை பாவாடை அணிந்திருக்கும் பெண்ணின் படத்தை மறைத்தே வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய விதிகளை தீவிரமாக கடைபிடிக்கும் ஈரான் நாடு கடந்த மாதம் தான் ஜூம்பா நடனம் இஸ்லாமிய விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்று தடை விதித்தது. இந்நிலையில் குட்டைப்பாவாடை அணிந்த பெண்ணை சவுதி அரேபியா கைது செய்துள்ளது, அவர்கள் எந்த அளவிற்கு அவர்கள் நாட்டு விதிகளை கடைபிடிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    English summary
    Saudi Arabian authorities have arrested a woman who posted a video of herself on Snapchat wearing a miniskirt and a cropped top in one of the Gulf Kingdom’s most conservative regions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X