For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கசோக்கி கொலைக்கு காரணம்.. அமேசான் நிறுவனர் ஜெப்பின் போனை ஹேக் செய்த சவுதி.. பரபரப்பு திருப்பம்!

அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் செல்போனை சவுதி அரேபியா அரசு ஹேக் செய்து அதில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் செல்போனை சவுதி அரேபியா அரசு ஹேக் செய்து அதில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகில் நடக்கும் சில விஷயங்களுக்கு இடையில் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டு இருப்போம். ஆனால் நாம் கொஞ்சம் கூட யோசித்து பார்க்காத இரண்டு விஷயங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருக்கும்.

அப்படி ஒரு விஷயம்தான் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் திருமண முறிவிற்கும் பத்திரிக்கையாளர் கசோக்கி கொலைக்கும் இடையில் பெரிய தொடர்பு இருக்கிறது.

 ராகுல் காந்தி அதிரடி.. கேரளா வயநாடு தொகுதியில் போட்டி.. அமேதியிலும் தேர்தலை சந்திக்கிறார்! ராகுல் காந்தி அதிரடி.. கேரளா வயநாடு தொகுதியில் போட்டி.. அமேதியிலும் தேர்தலை சந்திக்கிறார்!

என்ன நடந்தது

என்ன நடந்தது

கடந்த சில மாதங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் அறிவிக்கப்பட்டார். ஆனால் சில நாட்களில் அவரின் மனைவி அவரை விவாகரத்து செய்தார். இதனால் அவரின் சொத்துக்களில் சில அவரின் மனைவிக்கு சென்றது. ஆனால் கதை இது கிடையாது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

கடந்த சில மாதங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் அறிவிக்கப்பட்டார். ஆனால் சில நாட்களில் அவரின் மனைவி அவரை விவாகரத்து செய்தார். இதனால் அவரின் சொத்துக்களில் சில அவரின் மனைவிக்கு சென்றது. ஆனால் கதை இது கிடையாது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து ஜெப் பெஸோஸ் அதிரடியாக ஒரு பணியில் இறங்கினார். கெவின் டி பெக்கர் என்ற பிரபல துப்பறியும் நிபுணரை அழைத்து, இந்த புகைப்படங்கள் லீக் ஆனது எப்படி என்று விசாரிக்க சொன்னார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த விசாரணை நடந்து வந்தது. இதில்தான் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

யார் இவர்

யார் இவர்

இந்த கதை இப்படியே இருக்கட்டும், கசோக்கி கொலை வழக்கிற்கு வருவோம். அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சவுதியை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கடந்த வருடம் கொலை செய்யப்பட்டார். வாஷிங்டன் போஸ்ட் இதழில் இவர் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து தொடர்ந்து எழுதி வந்தார்.

கொலை செய்யப்பட்டார்

கொலை செய்யப்பட்டார்

சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர். அமெரிக்காவில் வசித்து வந்த இவர் கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு வந்த போது கொல்லப்பட்டார். இவரது கொலைக்கும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

அட இதுதான்

அட இதுதான்

சரி இதற்கும் ஜெப் பெஸோஸ் விவாகரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். சம்பந்தம் இருக்கிறது. ஜமால் கசோக்கி எழுதி வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு உரிமையாளர் வேறு யாரும் கிடையாது, ஜெப் பெஸோஸ்தான். ஜெப் பெஸோஸின் முழு அனுமதியுடன்தான் ஜமால் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். இதுதான் தற்போது பிரச்சனை.

ரிப்போர்ட் அளித்துள்ளார்

ரிப்போர்ட் அளித்துள்ளார்

இந்த நிலையில்தான் துப்பறிவாளர் கெவின் டி பெக்கர் தன்னுடைய ரிப்போர்ட்டை பொதுவில் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஜெப் பெஸோஸ் செல்போனை சவுதி அரசு ஹேக் செய்து இருக்கிறது. முகமது பின் சல்மானின் நேரடி கண்காணிப்பில் இந்த ஹேக் நடந்துள்ளது. கட்டுரைகளுக்கு பதிலடியாக இந்த ஹேக் நடந்துள்ளது. அவர்கள்தான் அந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு, விவாகரத்திற்கு ஏற்பட செய்து இருப்பது என்று ரிப்போர்ட் வெளியிட்டுள்ளார்.

கடவுளே

கடவுளே

இந்த ரிப்போர்ட் பொதுவில் வெளியாகி இருக்கிறது. இதை குறித்து அவர் வரிசையாக நிறைய கட்டுரைகளை எழுதி உள்ளார். ஆனால் ஜெப் பெஸோஸ் இதுகுறித்து இன்னும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. உலகின் நம்பர் ஒன் பணக்காரருக்கே இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Saudis Hacked Amazon CEO's Phone, The interesting backtrack story of Jamal's murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X