For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணுக்கெட்டும் தூரத்தில் ‘கைக்கொள்ளாத’ அளவிற்கு மறைந்திருக்கும் கேலக்சி கூட்டம்... விஞ்ஞானிகள் குஷி

Google Oneindia Tamil News

நியூயார்க்: நமது பால்வெளி மண்டலத்திற்கு (Milky Way galaxy) வெகு அருகிலேயே, நூற்றுக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் (Galaxies) இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியைத் தாண்டி விண்வெளியில் புதிய விஷயங்களைத் தேடி சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. செயற்கைக் கோள்கள், தொலைநோக்கி மூலம் தினமும் புதிய புதிய விஷயங்கள் நமக்குத் தெரிய வருகின்றன.

அந்த வகையில் நமது சூரியன், கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலத்துக்கு மிக அருகில் நூற்றுக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும், அதில் பல கோடி நட்சத்திரங்களும் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

கிரேட் அட்ராக்டர்...

கிரேட் அட்ராக்டர்...

நமது பால்வெளி மண்டலத்தைத் தாண்டிய பகுதி கிரேட் அட்ராக்டர் என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஈர்ப்பு விசையானது மிகவும் அதிகம். அதாவது நமது சூரியனைப் போல் பல கோடி சூரியன்களின் ஈர்ப்பு விசைக்கு அது சமம்.

833 கேலக்சிகள்...

833 கேலக்சிகள்...

அப்பகுதியில் நூற்றுக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதுவரை சுமார் 883 மண்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கணிப்பு...

கணிப்பு...

இத்தகைய நட்சத்திர மண்டலங்கள் இவ்வாறு இருக்கலாம் என்ற கணிப்பு நம்மிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால், தற்போது அவை குறித்த தகவல்கள் நமக்கு மேலும் ஆச்சர்யம் தருபவைகளாக இருக்கின்றன.

250 மில்லியன் ஒளி ஆண்டுகள்...

250 மில்லியன் ஒளி ஆண்டுகள்...

இந்தப் புதிய நடசத்திர மண்டலங்கள் சிஎஸ்ஐஆர்ஓ-ன் பார்க்ஸ் ரேடியோ தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை நமக்கு 250 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

மறைத்துக் கொண்டிருந்த கேலக்சி...

மறைத்துக் கொண்டிருந்த கேலக்சி...

இந்தத் தூரமானது வானியல் அளவுகளின்படி மிகவும் குறைவான தூரமே. ஆன போதும், இவ்வளவு தாமதமாக இந்தப் மண்டலங்களை நாம் கண்டுபிடித்ததற்குக் காரணம், அவற்றை நமது பால்வெளி மண்டலம் மறைத்துக் கொண்டிருந்தது தான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நகர்ந்து கொண்டிருக்கிறோம்...

நகர்ந்து கொண்டிருக்கிறோம்...

இது மட்டுமின்றி நமது பால்வெளி மண்டலம் இந்த நட்சத்திர மண்டலங்களை நோக்கி ஈர்ப்பு விசையால் நகர்ந்து வருகிறதாம். இதன் வேகமானது மணிக்கு சுமார் 20 லட்சம் கிமீ என்ற அளவில் உள்ளதாம்.

விண்மீன் கூட்டம்...

விண்மீன் கூட்டம்...

பொதுவாக ஒரு நட்சத்திர மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் விண்மீன்கள் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அந்த வகையில் பார்த்தால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டலத்தில் கோடிக்கணக்கான விண்மீன்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தொடர்ந்து இந்தப் புதிய நடசத்திர மண்டலங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

English summary
The discovery may help to explain the Great Attractor region, which appears to be drawing the Milky Way and hundreds of thousands of other galaxies towards it with a gravitational force equivalent to a million billion Suns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X