For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூமியை போன்ற புதிய கிரகம் ‘கெப்ளர் -78பி’ கண்டுபிடிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: பூமியை போன்றதொரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா சார்பில் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட விண்கலம் ‘கெப்ளர்'. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில், தற்போது புதிய கிரகம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளது கெப்ளர் விண்கலம்.

கெப்ளர் -78பி....

கெப்ளர் -78பி....

பூமியை போன்ற சாயலில் காணப்படும் அந்த கிரகத்திர்கு 'கெப்ளர்-78 பி' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இன்னோரு பூமியா...?

இன்னோரு பூமியா...?

பூமியில் இருந்து சுமார் 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இக்கிரகம் பூமியை போன்றே வடிவமைப்பு உடையதாக காணப் படுகிறது.

இரும்புத்தாது...

இரும்புத்தாது...

இந்தக் கிரகத்தில் பூமியில் இருப்பது போன்றே பாறைகள் காணப் படுகின்றனவாம். மேலும், இங்கு இரும்பு தாது அதிக அளவில் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அதிக எடை....

அதிக எடை....

பூமியை விட சுமார் 1.2 மடங்கு பெரியதும், 1.7 மடங்கு கூடுதல் எடையும் கொண்டதாகக் காணப் படுகிறது இந்தக் கிரகம்.

விஞ்ஞானிகள் கருத்து...

விஞ்ஞானிகள் கருத்து...

மேலும், பூமியை விட 2 ஆயிரம் டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் அங்கு நிலவுவதால், அக்கிரகத்தில் எந்த உயிரினமும் வாழ்வதற்கு சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

English summary
Scientists this week announced the discovery of a new planet, roughly 400 lightyears away, that they are calling Kepler 78b. Kepler is rare in that it contains similar features to that of the planet Earth; it is composed of a mixture of rock and iron, and it orbits a sun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X