For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புளூட்டோவை சுற்றி நிற்கும் "ஹார்ட்"... ஆய்வாளர்கள் வியப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: நாசா அனுப்பியுள்ள நியூ ஹரிஸான்ஸ் விண்கலம் புளூட்டோவின் புதிய தெள்ளத் தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதில் ஒன்றில் புளூட்டோவின் மேற்பரப்பில் இதய வடிவிலான அமைப்பு போன்ற தோற்றம் பதிவாகியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவா 2006ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது நியூஹாரிஸான்ஸ் விண்கலம். மணிக்கு 58,536 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இது பூமியிலிருந்து கிளம்பியது. ஒரு ஜெட் விமானத்தை விட 100 மடங்கு அதிவேகமானது இது.

தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக புளூட்டோ கிரகம் குறித்த தகவல்களை இந்த விண்கலமானது அனுப்பி வருகிறது.

தொடர்பை இழந்தது...

தொடர்பை இழந்தது...

இந்த விண்கலமானது ஜூலை 4ம் தேதி தனது ப்ளூட்டோ கிரகத்துடனான தொடர்பை இழந்து 89 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பை மீளப் பெற்றது.

புதிய படங்கள்...

புதிய படங்கள்...

இதற்கிடையே ப்ளூட்டோ குறித்து நியூஹாரிஸான்ஸ் லேட்டஸ்டாக அனுப்பி வரும் புகைப்படங்கள் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.

கருப்பு நிற பகுதிகள்...

கருப்பு நிற பகுதிகள்...

இம்மாதம் 1ம் மற்றும் 3ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களில் புளூட்டோ கிரகத்தில் 4 கருப்பு நிறப் பகுதிகள் இருப்பது தெரிய வந்தது.

தெளிவான படங்கள்...

தெளிவான படங்கள்...

தற்போது மேலும் புளூட்டோ பற்றிய சில புகைப்படங்களை அது அனுப்பியுள்ளது. அவை முந்தையப் படங்களைக் காட்டிலும் தெளிவானதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய வடிவம்...

இதய வடிவம்...

அவற்றில் ஒரு புகைப்படத்தில் புளூட்டோ கிரகத்தின் மேற்பரப்பில் காதலர்களின் சின்னமான இதய வடிவம் போன்ற தோற்றம் அமைந்துள்ளது. இது ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமிங்கலம்...

திமிங்கலம்...

8 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்த இந்த காதல் சின்னத்தை 'திமிங்கலம்' என்று செல்லமாக விஞ்ஞானிகள் அழைத்து வருகின்றனர். விரைவில் இதன் நெருக்கமான புகைப்படத்தை பெறும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆய்வு...

ஆய்வு...

ஜூலை 14ம் தேதி புளூட்டோவை கடந்து செல்லும் ஹாரிஸான்ஸ் விண்கலமானது, அதன் பின்னர் பல கியூப்பர் பெல்ட் ஆப்ஜெக்ட்ஸ் குறித்தும், ப்ளூட்டோவின் பிற பகுதிகளையும் ஆராய உள்ளது. 2026ம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுக்கு வருகிறது.

English summary
Nearing the end of a 9-and-a-half-year journey to the solar system's unexplored outer reaches, scientists are exited about the new images of Pluto being received by the New Horizons spacecraft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X