For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிதாக உருவான ராட்சச கிரகம்.. புகைப்படம் வெளியிட்டு அதிர்ச்சி அளித்த ஐரோப்பா விஞ்ஞானிகள்!

பிடிஎஸ் 70 என்ற நட்சத்திர குடும்பத்தில் புதிய கிரகம் ஒன்று உருவாவதை ஐரோப்பா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    புதிதாக உருவான கிரகத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை- வீடியோ

    சிலி: பிடிஎஸ் 70 என்ற நட்சத்திர குடும்பத்தில் புதிய கிரகம் ஒன்று உருவாவதை ஐரோப்பா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    முதல்முறையாக உலகிலேயே ஒரு கிரகம் உருவாவதை இவர்கள்தான் கண்டுபிடித்துள்ளனர். இது உருவாகும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இதை பற்றி கண்ணை பறிக்கும் புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    இந்த புதிய கிரகம் நமது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கிரகத்தை விட பெரிதாக இருப்பதாக கூறியுள்ளனர். இதன் மூலம் பூமி எப்படி உருவாகி இருக்கும் என்று கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.

    கிரகம் உருவாவது

    கிரகம் உருவாவது

    இந்த படத்தில் கிரகம் எப்படி உருவானது என்று தெளிவாக தெரிந்துள்ளது. இப்படி புதிதாக உருவான கிரகத்தை சுற்றி, பெரிய அளவில் தூசி படலம் படிந்துள்ளது. பல பாறைகள் மோதி இந்த பெரிய கிரகம் உருவாகி, இந்த மோதல் காரணமாகவே, கிரகத்தை சுற்றி, பெரிய அளவில் தூசி படலம் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும் இன்னும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

    எப்படி செய்தார்கள்

    எப்படி செய்தார்கள்

    சிலியில் உள்ள, ஐரோப்பாவிற்கு சொந்தமான, பெரிய தொலைநோக்கி மூலம் இந்த சோதனையை செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக, அங்கு உருவாகி இருந்த தூசி படலத்தை வைத்து, அங்கு புதிய கிரகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் தொடர்ச்சியாக ஆய்வு செய்ததில் அங்கு புதிய கிரகம் உருவானதை கண்டுபிடித்துள்ளனர்.

    எங்கே

    எங்கே

    இந்த கிரகம் பிடிஎஸ் 70 என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கும், நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கிறது. இந்த நட்சத்திரத்தை சுற்றி வரும் முதல் கிரகம் இதுதான். சரியாக இந்த நட்சத்திரத்தில் இருந்து அந்த புதிய குழந்தை கிரகம் 3 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்த நட்சத்திர குடும்பத்தில் வேறு கிரகம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    என்ன பண்பு

    என்ன பண்பு

    இது மிகவும் அதிக அளவில் வெப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனுடைய தற்போதையை வெப்பமும் 1000 டிகிரி செல்ஸியஸ் என்று கூறப்பட்டுள்ளது. இது இப்போதான் உருவாகி இருப்பதால் அதிக வெப்பத்தில் காணப்படுவதாகவும், இன்னும் சில மாதங்களில் வருடங்களில் இதன் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    European Scientists release a photo of how a new planet being born for the first ever time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X