வா அருகில் வா பட பொம்மையே பரவாயில்லை போலயே.. ஸ்காட்லாந்தில் கோபக்கார "பேய்" பொம்மை!
எடின்பெர்க்: 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வாங்கிய பொம்மை ஒன்று பேய் போல் அதுவாகவே வாயை மூடுவதும் திறப்பதுமாக இருப்பதாக ஸ்காட்லாந்து நபர் ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.
வா அருகில் வா படத்தில் பொம்மை பார்ப்பதற்கு பேய் போல் இருக்கும். அதன் மீது பேய் பிடித்துவிடுவதால் அது தானாகவே நடக்கும். நடிகை வைஷ்ணவிக்கு பாதுகாப்பாக இருக்கும்.
பொதுவாக பேய் படங்களில் இப்படித்தான் ஏதாவது ஒரு பொம்மையில் பேய் நுழைந்து கொண்டு அந்த குடும்பத்தையே ஆட்டி படைக்கும். இப்படித்தான் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இருட்டுல போகாத பேய் வரும்னு சொன்னது போய்.. இப்போ ரோட்ல போகாத நோய் வரும்னு சொல்றாங்களே

பொம்மை
இந்த திரைப்படங்களில் பொம்மைகள் திடீரென பேசுவது, சிரிப்பது, நடப்பது, அசைவது போன்றவற்றை செய்யும். ஆனால் நம் வீட்டில் ஒரு பொம்மை இருந்து அது சிரித்தாலோ அசைந்தாலோ என்ன செய்வீர்கள்? அனபெல் என்ற திரைப்படம் ஒரு உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டது. அதில் ஒரு பேய் பொம்மை இருக்கும்.

ஸ்காட்லாந்து
அது ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு தானாகவே செல்லும். இது போன்ற ஒரு சம்பவம் ஸ்காட்லாந்தில் நடந்துள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் கிரீகர் ஸ்டீவார்ட். 51 வயதாகும் இவர் கட்டட சர்வேயராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கலிபோர்னியாவில் ஒரு பொம்மையை வாங்கியுள்ளார்.

வாயை தானாகவே மூடும் திறக்கும்
இந்த பொம்மை தானாகவே வாயை திறந்து மூடுவதாகவும் அந்த பொம்மை குறித்து கூறுகிறார். இதை அங்கிள் ஹெர்ப் என அழைக்கிறார். இந்த பொம்மை வாயை திறக்கவும் மூடுவதற்கும் எந்த வித மான இயந்திரமும் இல்லை என்பது கூடுதல் திகிலான சம்பவம் ஆகும். இந்த பொம்மை சோகமாக இருந்தால் வாயை திறக்கும் என கிரீகர் கூறுகிறார்.

பேய் டிவைஸ்
பெட்டியில் அந்த பொம்மையை வைத்திருந்தால் கோபத்தில் அது வாயை திறக்குமாம். அதை வெளியே எடுத்து வைத்தால் வாயை மூடிக் கொள்ளுமாம். இந்த பொம்மை கிரீகருக்கு எந்த வித தொல்லையையும் கொடுப்பதில்லை. அதனால் இந்த பொம்மையுடன் அவர் சந்தோஷமாகவே பொழுதை கழிக்கிறார். இந்த பொம்மையில் பேய் இருக்குமோ என பேய் இருப்பதை கண்டறியும் கருவி மூலம் பேசி பார்த்த போது அதன் பெயர் ஹெர்பெர்ட் என கூறியதாம். அதனால் அதை சுருக்கமாக அங்கிள் ஹெர்ப் என அழைக்கிறார் கிரீகர்.