For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீ அங்கிட்டுனா நாங்க இங்கிட்டு.. பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து, வடஅயர்லாந்து பிரிந்து தனிநாடாகிறது?

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகி உள்ள நிலையில் பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து பிரிந்து தனிநாடாவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் சூழல் உருவாகி உள்ளது.

கிரேட் பிரிட்டனின் ஒரு அங்கமாக 307 ஆண்டுகளாக ஸ்காட்லாந்து நீடித்து வருகிறது. ஆனால் ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடாக செல்ல வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது பிரிட்டனில் இருந்து பிரிந்து தனிநாடாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 55% பேரும் ஆதரவு தெரிவித்து 45% பேரும் வாக்களித்தனர். இதனால் ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிவது சாத்தியமில்லாமல் போனது.

வெளியேற ஆதரவு

வெளியேற ஆதரவு

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிந்து செல்வது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இதில் 51.9% பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆதரவு தெரிவித்துள்ளனர். 48.1% பேர் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

ஸ்காட்லாந்தில் கடும் எதிர்ப்பு

ஸ்காட்லாந்தில் கடும் எதிர்ப்பு

இதில் ஸ்காட்லாந்து மக்களில் 62% ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் நீடிக்க வேண்டும் என வாக்களித்திருக்கின்றனர். கிரேட் பிரிட்டனின் அங்கங்களான இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகியவற்றில் ஸ்காட்லாந்தில்தான் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரிய மிகக் கடுமையான எதிர்ப்பு உள்ளது.

ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க் நகரில் 74.4% பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வாக்களித்திருக்கின்றனர். அதேபோல் மற்றொரு முக்கிய நகரான கிளாஸ்கோ நகரத்தில் 66.6%, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் நீடிக்க வேண்டும் என வாக்களித்திருக்கின்றனர்.

தனிநாடு குரல்கள்...

தனிநாடு குரல்கள்...

இருப்பினும் ஒட்டுமொத்த முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனிநாடாவதற்கான மற்றொரு வாக்கெடுப்புக்கான குரல்களும் எழத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்காட்லாந்து தனிநாடாக இடம்பெற வேண்டும் என அதன் தலைவர்கள் கருதுகின்றனர்.

ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சரான நிக்கோலா ஸ்டர்ஜன், இந்த வாக்கெடுப்பு முடிவுகள் , ஸ்காட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே தங்கள் எதிர்காலமாகப் பார்க்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன என்கிறார்.

வடஅயர்லாந்து

வடஅயர்லாந்து

இதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று வட அயர்லாந்தில் 55.8% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என 44.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நிலையில் பிரிட்டனில் இருந்து வட அயர்லாந்தும் தனிநாடாகி ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக நீடிக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.

English summary
The Scots, who went to a referendum seeking independence from the UK in 2014 but fell short of their target, have voted overwelmingly in favour of remaining within the EU in the June 23 referendum but witnessed other parts of the UK preferring the Brexit. Glasgow (which voted for Scottish independence in 2014) and Edinburgh---the two big cities of Scotland---voted overwhelmingly in favour of remaining in the EU.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X