For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

20 ஆண்டுகளுக்குப் பின் சுத்தம் செய்யப்படும் அமெரிக்காவின் ‘உவ்வே’ சுவர்... மக்கள் சோகம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவிலுள்ள பிரபலமான சூயிங் கம் சுவர், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் சுத்தம் செய்யப்பட உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் ‘பைக் ப்லேஸ் மார்கெட்டில் அமைந்துள்ளது ‘சூயிங் கம் சுவர்'. நூறு ஆண்டுகள் பழமையான இந்த மார்க்கெட்டின் சுவர் ஒன்றில், சுமார் 20 ஆண்டுகளாக இந்த வழியே செல்லும் மக்கள் தங்கள் வாயில் மென்று சாப்பிட்ட சூயிங்கத்தை வீசிச் சென்று வருகின்றனர்.

இதனால் அந்த சுவரே விதம்விதமான கலர் சூயிங்கம்களால் நிரம்பி காட்சியளிக்கிறது.

சுற்றுலாத்தளம்..

சுற்றுலாத்தளம்..

ஆறு அங்குல அளவுள்ள இந்த சுவரில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான சூயிங் கம்கள் ஒட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சுவர் பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் விளங்கி வருகிறது.

சுத்தம்...

சுத்தம்...

இந்நிலையில், இந்த பழமையான சுவரைப் பாதுகாக்கும் வகையில் அதிலுள்ள சூயிங்கங்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம் இதற்கான வேலைகள் தொடங்குகின்றன. சுமார் நான்கு நாட்கள் இந்த சுவரை சுத்தம் செய்ய தேவைப்படுமெ என எதிர்பார்க்கப்படுகிறது.

வருத்தம்...

வருத்தம்...

சுகாதார நடவடிக்கையாகவும், சுவரைப் பாதுகாப்பதற்காகவும் இந்த பணி மேற்கொள்ளப்பட்டாலும், இது அச்சுவரின் ரசிகர்கள் பலரையும் வருத்தப்பட வைத்துள்ளது.

இன்னும் 20 வருசம் துப்பணுமே....

இன்னும் 20 வருசம் துப்பணுமே....

உலகிலேயே அருவருக்கத்தக்கதாக கருதப்படும், இந்தச் சுவர் சுத்தம் செய்யப்படுவது குறித்து சமூகவலைதளப் பக்கங்களில் பலரும் தங்களது வேதனைகளைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் மீண்டும் இது போன்ற சுவர் உருவாக இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனக் கூறி, அந்த சுவரின் அருகில் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

மக்கள் கூட்டம்...

மக்கள் கூட்டம்...

இதனால் அந்தச் சுவரைச் சுற்றிலும் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. துப்பிக் கெட்ட சுவர் என்பது இதுதானோ!

English summary
After 20 years of people sticking their chewing gum to the walls of an alley in Seattle, officials have said it is time for a clean-up
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X