For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜக்கர்பர்க், ஸ்டீவ் ஜாப்ஸ் வெற்றிக்கான ரகசியம் தெரிந்துவிட்டதே!

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டார்சி ஆகியோரின் வெற்றியின் ரகசியம் தெரிய வந்துள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு பல முக்கிய பணிகள் இருக்கும். அதனால் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் சில விஷயங்களை திரும்பத் திரும்ப செய்கிறார்கள்.

அவ்வாறு ஒரே மாதிரியான பழக்கங்கள் கொண்ட நிறுவன தலைவர்களை பார்ப்போம்.

மார்க் ஜக்கர்பர்க்

மார்க் ஜக்கர்பர்க்

ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜக்கர்பர்க் சிமெண்ட் கலரில் ஒரே மாதிரியான 20 டி சர்ட்டுகள் வைத்துள்ளார். அவர் அவற்றை தான் வாரத்தின் 5 நாட்களில் அலுவலகத்திற்கு அணிந்து செல்கிறார். டி சர்ட்டுக்கு மேட்சிங்காக நீல நிற ஜீன்ஸ் அணிந்து செல்கிறார் அவர்.

ஜாப்ஸ்

ஜாப்ஸ்

மறைந்த ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் 100 டர்ட்டில் நெக் ஸ்வெட்டர்கள் வைத்திருந்தார். தினமும் என்ன அணிவது என்று யோசித்து நேரத்தை வீணாக்காமல் இருக்க அவர் இப்படி செய்தாராம்.

டார்சி

டார்சி

ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டார்சி வாரத்தின் 5 வேலை நாட்களில் 5 வகையான வேலைகளை செய்வார். திங்கட்கிழமை நிர்வாக கூட்டம், செவ்வாய்கிழமை தயாரிப்பு மேம்பாடு, புதன் மார்க்கெட்டிங், வியாழன் டெவலப்பர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் சந்திப்பு மற்றும் வெள்ளிக்கிழமை நிறுவனத்தின் கலாச்சாரம் குறித்த ஆலோசனைக்கு ஒதுக்கி வைத்துள்ளார். வார இறுதி நாட்களில் சொந்த வேலைகளை செய்வார்.

டேவிட் கார்ப்

டேவிட் கார்ப்

டம்ப்ளரின் இணை நிறுவனரான டேவிட் கார்ப் தினமும் காலையில் பான்கேக்குகள், முட்டை, அவகாடோ மற்றும் பேக்கன் ஆகியவற்றையே சாப்பிடுகிறார்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

செய்ததையே திரும்பத் திரும்ப செய்வது மக்களுக்கு மன அழுத்தத்தை அளிக்கும் சூழல்களை சமாளிக்கவும், அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்படுவது வியாபாரம் நன்கு நடைபெறவும் உதவுகிறது என்று ஹார்வர்டு பிசினிஸ் ஸ்கூல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

English summary
The secret behind many of the top techies are not only their exceptional talent but also their rigid routines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X