For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபல ஐரோப்பிய யூனியன் வங்கியின் பெண்கள் உடைமாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள்

By Siva
Google Oneindia Tamil News

லக்சம்பர்க்: லக்சம்பர்க்கில் உள்ள யூரோப்பியன் இன்வெஸ்ட்மென்ட் வங்கியில் இருக்கும் பெண்கள் உடை மாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான லக்சம்பர்கில் பழமை வாய்ந்த யூரோப்பியன் இன்வெஸ்ட்மென்ட் வங்கி உள்ளது. ஐரோப்பிய யூனியன் தொடர்பான திட்டங்களுக்கு கடன் வழங்கி வரும் அந்த வங்கியில் சுமார் 3 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் அந்த வங்கியில் பணியாற்றும் 50களில் இருக்கும் நபர் ஒருவர் பெண்களின் உடை மாற்றும் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அநத் கேமராவில் சுமார் 150 பெண்கள் உடைமாற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Secret cameras in women's changing rooms at EU bank in Luxembourg!

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ரகசிய கேமராக்களை வைத்த ஊழியரை சஸ்பெண்ட் செய்து வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நபர் ரகசிய கேமரா வைத்தது மட்டும் அல்லாமல் வங்கி வளாகத்தில் மேலும் சில சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கேமரா வைத்ததால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வங்கி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

English summary
An employee of the European Investment Bank has been suspended after he installed secret cameras in the women's changing rooms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X