For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேவு பார்க்கவா, சதி திட்டமா? சவுதி அரண்மனை மேல் பறந்த டிரோன்.. சுட்டு வீழ்த்திய பாதுகாப்புபடை

சவுதி அரசர் இருக்கும் பகுதியான ''ராயல் பேலஸில்'' பறந்த ஆள் இல்லா சிறிய ரக டிரோன் விமானம் ஒன்று, அந்நாட்டு பாதுகாப்பு படையால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரசர் இருக்கும் பகுதியான ''ராயல் பேலஸில்'' பறந்த ஆள் இல்லா சிறிய ரக டிரோன் விமானம் ஒன்று, அந்நாட்டு பாதுகாப்பு படையால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறது.

நேற்று இரவு இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. ராயல் பேலஸின் அருகிலேயே அந்த விமானம் நீண்ட நேரம் சுற்றி இருக்கிறது.

பாதுகாப்பு படையின் துரிதமான நடவடிக்கையால் இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. தற்போது இந்த பிரச்சனை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

என்ன

என்ன

அந்த டிரோன் சரியாக 20 நிமிடம், ராயல் பேலஸின் மேல் பகுதியில் சுற்றுயுள்ளது. அங்கு இருப்பவர்களை வேவு பார்த்தது போல சுற்றி இருக்கிறது. இது பறக்கும் சத்தம் கேட்காத அளவிற்கு சுற்றியதன் காரணத்தால், முதலில் அதன் இடத்தையே பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

சுட்டு வீழ்த்தினார்

இந்த நிலையில், கடைசியாக பாதுகாப்பு படை அந்த டிரோனை கண்டுபிடித்தது. பின் அதை நோக்கி 5 க்கும் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். சமயங்களில் அந்த டிரோன் குண்டுகளில் இருந்து விலகியது உள்ளது. 30 நொடி துப்பாக்கி சூட்டிற்கு பின் அந்த டிரோன் வீழ்த்தப்பட்டது.

உடனடியாக வெளியேறினார்

இதையடுத்து அந்த கட்டிடத்திற்குள் இருந்த சவுதி மன்னர் சல்மான் உடனடியாக வெளியேறினார். பங்கர் உதவியுடன் முதலில் பதுங்கி பாதுகாப்பாக இருந்த அவர், பின் கடும் பாதுகாப்பு வசதியுடன் விமான படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இன்னும், ராயல் பேலஸ் அழைத்து வரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

விசாரணை

விசாரணை

இதில் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது, துப்பாக்கி சூட்டில் யாரும் மரணம் அடைந்தார்களா என்று கூறப்படவில்லை. இது யார் அனுப்பியது என்று சவுதி தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. அதேபோல் அந்த டிரோனில் கேமரா, குண்டுகள் போன்ற உபகரணம் ஏதாவது இருந்ததா என்றும் தெரியவில்லை. இதுகுறித்து சவுதி பாதுகாப்பு படை விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது.

English summary
Security forces shoot down a drone which flew Royal Palace, which the house of King Salman in Saudi Arabia. Investigatin under goes in this case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X