For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலா நிலா ஓடி வா... காலையிலேயே வானில் வரிசை கட்டி கியூவில் நின்று, வேடிக்கை காட்டிய கிரகங்கள்...!

Google Oneindia Tamil News

லண்டன்: வானில் நிலா, மெர்குரி, ஜூபிடர் மற்றும் வீனஸ் உள்ளிட்ட கிரகங்கள் வரிசை கட்டி காட்சியளித்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

வானில் கிரகங்கள் வரிசை கட்டி நிற்கும் நிகழ்வு எப்போதாவது அரிதாக நிகழ்வதுண்டு. அத்தகைய காலங்களில் வானிலை பிரச்சினை ஏதுமின்றி அவை மக்களின் பார்வைக்கு கிடைப்பது அதை விட அரிது.

அப்படி ஒரு நிகழ்வு தான் நேற்று காலை வாய்த்தது. வானத்தில் நிலாவைச் சுற்றி மெர்குரி (புதன்), ஜூபிடர் (வியாழன்), வீனஸ் (வெள்ளி) என மற்ற கிரகங்கள் ரவுண்டு கட்டி போஸ் கொடுத்தன. நன்கு உற்றுப் பார்த்தால் சின்னப்புள்ளியாக செவ்வாய் கிரகம் கூட சிலருக்கு காட்சியளித்தது.

அழகிய போட்டோக்கள்...

அழகிய போட்டோக்கள்...

இந்த அரிய நிகழ்வை உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பார்த்து ரசித்த புகைப்பட நிபுணர்கள், அவற்றை அழகழகாக புகைப்படங்களாகச் சுட்டித் தள்ளியுள்ளனர்.

புதன்...

புதன்...

நிலாவிற்கு மிக அருகே வந்து நின்றிருந்தது புதன். சூரியனுக்கு மிக அருகில் உள்ள இந்தக் கிரகமானது பூமியைப் போல் மூன்றில் ஒரு பாக அளவுடையது. பூமியிலிருந்து சுமார் 48 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது இந்தக் கிரகம்.

வியாழன்...

வியாழன்...

அதற்கு அடுத்த இடத்தில் காட்சி தருகிறது வியாழன். சூரியக் குடும்பத்தில் 5வது கோளான இது, பூமியைப் போல் 11 மடங்குப் பெரியது. இது பூமியில் இருந்து சுமார் 365 மில்லியன் மைல் தொலைவில் அமைந்துள்ளது.

வெள்ளி...

வெள்ளி...

மற்ற கோள்களையெல்லாம் விட பிரகாசமாக தெரிவது தான் வெள்ளி கிரகம். பூமியிலிருந்து சுமார் 25 மில்லியன் மைல் தொலைவில் தான் உள்ளது இந்தக் கிரகம். ஏறக்குறைய இந்தக் கிரகம் பூமியின் அளவை ஒத்தது தான்.

English summary
Before dawn on Sunday morning look to the east to see a brilliant display of the Moon, Mercury, Jupiter and Venus. The three planets are “stacked” above the thinly crescent Moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X