For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்பிக்கு பதில் ஸ்லோபி.. ஷாக்கிங் விலை.. கேமரா கிங்.. ஆன்ட்ராய்டை ஆட்டம் காண வைத்த ஐபோன் 11!

யாருமே எதிர்பார்க்காத விலையில் புத்தம் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஐபோன் 11 போனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆன்ட்ராய்டை ஆட்டம் காண வைத்த ஐபோன் 11!

    நியூயார்க்: யாருமே எதிர்பார்க்காத விலையில் புத்தம் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் ஐபோன் 11 போனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    சிலிக்கான் வாலியின் சிங்கம் எப்படி போனதோ அப்படியே திரும்பி வந்து இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவிற்கு பின் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடி மேல் அடி என்றுதான் கூற வேண்டும். அதிலும் ஐபோன் 10 அல்லது ஐபோன் எக்ஸ் வெளியாகி பெரிய அளவில் சொதப்பியது. நல்ல செயல்திறனை கொண்டு இருந்தாலும் பெரிதாக மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

    Selfies and many more: iPhone 11 released with an unexpected prize

    ஐபோன் எக்ஸ் விலையும் மக்களை ஈர்க்கவில்லை. முக்கியமாக சீனாவின் விவோ, ஒப்போ போன்ற ஆண்ட்ராய்ட் மார்க்கெட், ஐபோனை கொஞ்சம் கொஞ்சமாக பாதாளத்திற்கு தள்ளியது. தற்போது அதில் இருந்து மீண்டும் வருவதற்காக ஐபோன் களமிறக்கி இருக்கும் ரட்சகன்தான் ஐபோன் 11.

    ஆம் ஐபோன் 11னை ஐபோன் 4எஸ் போலவே ஆப்பிள் நிறுவனத்தின் ரட்சகன் என்று கூறலாம். பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் நிறைய ரூமர்களுக்கும் இடையில் ஐபோன் 11 வெளியாகி இருக்கிறது. இதில் பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஐபோன் 11.

    முழுக்க கேமரா மீது கவனம் செலுத்தி ஐபோன் 11 உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாருமே எதிர்பார்க்காத விலையில் ஐபோன் 11 உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 11 பின்வரும் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

    ஐபோன் 11 அமெரிக்காவில் $699 டாலருக்கு கிடைக்கும். இந்தியாவில் ஜிஎஸ்டி சேர்த்து 65 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் 11ன் டிஸ்பிளே 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே கொண்டது.

    ஐபோன் 11 புத்தம் புதிய ஒளிபோபிக் கோட்டிங் கொண்டது. இதனால் இதில் ஸ்கிராட்ச் கொஞ்சம் கூட ஏற்படாது. அதேபோல் நிறமும் போகாது. எளிதில் அழுக்கடையாது.

    ஐபோன் 11 எச்டிஆர் வசதியுடன் டால்பி விஷன் மற்றும் டால்பி சப்தம் கொண்டது. இதில் எச்டிஆர்10 வசதியும் உள்ளது.

    மொத்தம் கருப்பு, வெள்ளை, சிவப்பு, நீலம், பர்ப்பிள், மஞ்சள் ஆகிய 6 நிறங்களில் கிடைக்கும்.

    ஐபோன் 11 ஆனது 12 எம்பி கொண்டது பின்பக்க கேமரா கொண்டது. பின்பக்கம் 2 கேமராக்கள் இருக்கும் . பிரைமரி கேமரா f1.8 OIS கொண்டது. எந்த போனிலும் இல்லாத அளவிற்கு அல்ட்ராவைட் வசதி கொண்டது.

    அதேபோல் ஐபோன் 11 முன்பக்க செல்பி கேமரா 12 எம்பி கொண்டது.

    ஐபோன் 11 செல்பி கேமரா மூலம் உலகிலேயே முதல்முறையாக ஸ்லோமோஷனில் செல்பி எடுக்க முடியும். இதற்கு ஸ்லோஃபி என்று பெயர் வைத்துள்ளனர். ஆங்கிலத்திற்கு புதிய வார்த்தை கிடைத்துவிட்டது.. நம்ம தமிழ் பாடலாசிரியர்களுக்கும்தான்.. ஏ ஸ்லோபிபுள்ள!

    இரண்டு கேமராக்களிலும் நைட் மோட் இருக்கிறது. இது வேகமாக படம் எடுக்க குயிக் டேக் வசதி உள்ளது.

    ஐபோன் 11 ஏ13 பயோனிக் புரோசசர் கொண்டது.

    இதில் பிங்கர் பிரிண்ட் லாக் கிடையாது. முழுக்க முழுக்க Face ID மூலம் மட்டுமே லாக் செய்ய முடியும்.

    அதேபோல் ஐபோன் எக்ஸ்ஆர்ஐ விட 1 மணி நேரம் கூடுதலாக சார்ஜ் நிற்கும்.

    மேலும் வயர்லஸ் சார்ஜிங் வசதி கொண்டது.

    2 மீட்டர் வரை வாட்டர் ஃபுரூப் வசதி கொண்டது. இது மட்டுமில்லாமல் ஐபோன் தற்போது ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்களையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Selfies and many more: iPhone 11 released with an unexpected prize.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X