For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீருக்கு பாக். ராணுவத்தை அனுப்பனுமாம்... ஹபீஸ் சயீத் கொக்கரிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பி இந்தியாவுக்கு பாடம் கற்பியுங்கள் என்று பாகிஸ்தானுக்கு பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கோரிக்கை விடுத்து உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த வன்முறை தொடர்கிறது.

காஷ்மீரில் வன்முறையை தூண்டியதில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Send troops to Kashmir, Hafiz Saeed tells Pakistan

இந்நிலையில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உ தவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத், காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பி இந்தியாவுக்குப் பாடம் கற்பியுங்கள் என்று பாகிஸ்தான் ராணுவத்துக்குக் கோரிக்கை விடுத்து உள்ளார்.

லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஹபீஸ் சயீத், காஷ்மீரில் மக்கள் தெருவில் வந்து போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் பெரிய நகர்வாகிஉள்ளது. காஷ்மீரில் அனைத்து குழுவும் ஒன்றாக இணைந்து உள்ளது.

ஹூரியத்தின் அனைத்து குழுவும் ஒன்றாகி உள்ளது. காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் தியாகம் வீணாகாது எனக் கூறியிருக்கிறார்.

English summary
Jamaat-ud-Dawa (JuD) chief Hafiz Saeed has called on Pakistan to send troops to Kashmir to “teach” India “a lesson”, as the death toll in the violence in Jammu and Kashmir climbed on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X