For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபேஸ்புக்கில் மன்னர் பற்றி அவதூறு – தாய்லாந்து பாடகருக்கு 15 ஆண்டு சிறைதண்டனை!

Google Oneindia Tamil News

Sentenced to 15 Years in Prison for Face book Posts
பாங்காக்: தாய்லாந்தைச் சேர்ந்த பாடகர் ஒருவருக்கு மன்னராட்சி பற்றிய ஃபேஸ்புக்கில் விமர்சித்ததற்காக 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் 86 வயது அதுல்யாதேஜ் மன்னராக இருக்கிறார். அந்நாட்டு சட்டப்படி மன்னரையோ அவரது குடும்பத்தினரையோ அவமதித்தால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

இருப்பினும் 28 வயதான தாய்லாந்து பாடகர் ஒருவர் 2010,11ஆம் ஆண்டுகளில் மன்னராட்சியை விமர்சித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அந்த பாடகருக்கு மன்னராட்சியை அவமதித்ததற்காக 15 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத் தீர்ப்பினைத் தொடர்ந்து அந்த பாடகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

English summary
A Thai musician has been sentenced to 15 years in prison for royal defamation, a court official said Friday, in the latest conviction under a controversial lese majeste law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X