For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாய் உணவை சாப்பிட்டு வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட செரீனா வில்லியம்ஸ்- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

ரோம்: நாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு டாய்லெட்டுக்கு நடையாய் நடந்துள்ளார் உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ். இந்த நிலையிலும் கூட இத்தாலிய ஓபன் டென்னிசில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.

ஓபன் டென்னிசில் பங்கேற்பதற்காக, இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள ஹோட்டலில் செரீனா தங்கியுள்ளார். அந்த ஹோட்டல் உணவக மெனுவில் நாய்களுக்கான உணவு வகைகள் என்ற பெயரில் சாப்பாடு ஐட்டங்கள் இருந்தன.

Serena Williams eats dog food & falls sick, Watch video

தனது செல்ல குட்டிநாய் 'சிப்'க்கு அதை வாங்கி கொடுத்த செரீனா, தானும் ஒரு ஸ்பூன் டேஸ்ட் பார்த்துள்ளார். ஆனால் அதன்பிறகு, வயிற்று கலக்கல் தாங்க முடியாமல் ஒரு மணி நேரமாக டாய்லெட்டுக்கும் ரூமுக்குமாக நடந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இத்தோடு என்கதை முடிந்தது என்றுதான் நினைத்தேன். நாய்கள் மட்டுமே சாப்பிட முடியும், மனிதர்கள் சாப்பிட கூடாது என்று அந்த ஹோட்டல் மெனுவில் ஒரு சப்-ஹெட்டிங் போட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றார்.

சோறு மற்றும் சால்மோன் மீன் கலக்கப்பட்ட அந்த உணவை தான் சாப்பிட்டதை செரீனா வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதனிடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்று, சக அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டினா மெக்ஹலேவை தோற்கடித்து அசத்தினார் செரீனா.

English summary
Serena Williams made herself ill after eating dog food hours before reaching the last eight of the Italian Open. The world number one tried "a spoonful" of food meant for her dog, Chip, before beating fellow American Christina McHale in straight sets in Rome. The 34-year-old American explained in a Snapchat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X