For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்ல நோக்கத்திற்காக... மேலாடையின்றி செரினா பாடும் பாடல்.. வீடியோவை நீங்களும் பாருங்கள்!

Google Oneindia Tamil News

சிட்னி: மார்புக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டு பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாகும். இந்நிலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக செரினா வில்லியம்ஸ் ஒரு பாடலை பாடி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் மேலாடை இன்றி தனது மார்பகத்தை கையால் மறைத்தவாறு இருக்கிறார். அவர் ஐ டச் மைசெல்ஃப் என்ற பாடலை பாடியுள்ளார்.

பாடல்

பாடல்

இந்த பாடல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிஸ்ஸி ஆம்ப்லெட்டால் எழுதப்பட்டது. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். இவரது நினைவாக இந்த பாடலை செரினா பாடியுள்ளார்.

உயிரை காக்க முடியும்

உயிரை காக்க முடியும்

இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்ட செரினா கூறுகையில், பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை ஆம்ப்லெட் தனது பாடலில் எழுதியுள்ளார். இதுபோல் அவ்வப்போது சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்.

வரும்முன் காப்பதே நல்லது

வரும்முன் காப்பதே நல்லது

சுய சோதனை மூலம் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். உலகம் முழுவதும் அனைத்து இன பெண்களையும் மார்பக புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துவதால் நான் விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்துள்ளேன். வந்த பின் அவதிப்படுவதை விட வரும்முன் காப்பதே நல்லது என்பது அனைவரும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.

வைரலான வீடியோ

இந்த வீடியோ மார்பக புற்றுநோயால் பலியான திவா மற்றும் கிரிஸ்சி ஆம்ப்லெட் ஆகியோருக்கு மரியாதை செய்வதற்காக வெளியிடப்பட்டது என்று செரினா கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

English summary
Serena Williams caused an internet sensation Sunday by posing topless for a video while singing "I Touch Myself" to raise awareness for breast cancer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X