For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் பாதுகாப்பாக விடுதலை

Google Oneindia Tamil News

துனிஸ்: லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக துனிசியாவுக்கான இந்திய தூதர் புனீத் ராய் குண்டல் தெரிவித்துள்ளார்.

லிபியா நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 7 இந்தியர்கள் செப்டம்பர் 14-ல் ஆயுத குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டனர். இந்த 7 பேரும் ஆந்திரா, பீகார், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

Seven Indian Nationals Kidnapped In Libya Released

லிபியாவில் இந்திய தூதரகம் இல்லை. துனிசியா நாட்டுக்கான இந்திய தூதரகம்தான் லிபியா வாழ் இந்தியர்களின் நலன் விவகாரங்களை கையாளுகிறது. கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக துனிசியா இந்திய தூதரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

லிபியாவில் 7 இந்தியர்கள் கடத்தல்... அந்த நாட்டு அரசுடன் இந்தியா பேச்சவார்த்தை!லிபியாவில் 7 இந்தியர்கள் கடத்தல்... அந்த நாட்டு அரசுடன் இந்தியா பேச்சவார்த்தை!

இந்த நிலையில் கடத்தப்பட்ட 7 இந்தியர்களும் பாதுகாப்பாக விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக துனிசியாவுக்கான இந்திய தூதர் புனீத் ராய் குண்டல் தெரிவித்துள்ளார்.

English summary
Indian Ambassador to Tunisia Puneet Roy Kundal said that Seven Indians who were kidnapped in Libya have been released.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X