For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதலால் பரபரப்பு

Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதும் அமெரிக்க படைகள் தங்கியுள்ள முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 3-ஆம் தேதி நடந்த தாக்குதலில் புரட்சி படையை சேர்ந்த சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம், ஈராக்கின் பலாட்டில் உள்ள விமான படை தளம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால்.. மோசமான விளைவுகளை சந்திப்பீர்.. ஈரானுக்கு டிரம்ப் வார்னிங் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால்.. மோசமான விளைவுகளை சந்திப்பீர்.. ஈரானுக்கு டிரம்ப் வார்னிங்

அமெரிக்க படைகள்

அமெரிக்க படைகள்

இந்த தாக்குதலுக்குள்ளான இடங்கள் ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலப் பகுதிகள் மற்றும் அமெரிக்க படைகள் தங்கிய முகாம்கள் என கூறப்படுகிறது.

விமான படை தளம்

விமான படை தளம்

இதுகுறித்து ஈராக் நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில் பாக்தாத்தில் உள்ள ஜாத்ரியா மற்றும் செலிபிரேஷன் ஸ்குயர், சலாவுத்தீன் மாகாணத்தில் இருந்த பலாட் விமான படை தளம் மீதும் ஏராளமான ஏவுகணைகள் வீசப்பட்டன.

உயிரிழப்பும் இல்லை

உயிரிழப்பும் இல்லை

எனினும் இந்த தாக்குதல்களில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. அது போல் பாக்தாத்தின் பசுமை மண்டல பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதும் கட்யூஷா ஏவுகணைகள் வீசப்பட்டன.

அபாய ஒலி

அபாய ஒலி

பெரும் சப்தம் உணரப்பட்டதை அடுத்து அபாய ஒலி ஒலிக்கப்பட்டு தாக்குதல் நடந்த இடங்கலில் உள்ள படைகள், தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். அப்போது பாக்தாத் வான்வெளியில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் பறந்ததை பார்த்தோம் என்றார்.

English summary
Iray militiary says that a blast was heard near US embassy in Green Zone. No one gets injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X