For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவால் கடுமையான நுரையீரல் தொற்று.. மரணத்தை தொட்டவரை பூரணமாக குணமாக்கிய சீனா

Google Oneindia Tamil News

வுஹான்: பிப்ரவரி தொடக்கத்தில் கொரோனா வைரஸ் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்ட 40 வயதான ஹு என்பவர் வுஹானில் முற்றிலும் குணமடைந்துள்ளார்.

Recommended Video

    இயல்பு நிலைக்கு திரும்பும் சீனாவின் வுஹான் நகரம் | China's Wuhan City Back to Normal

    உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகானில் தான் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பல லட்சம் மக்களை பாதித்துள்ளது. இதுவரை 12லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். 204 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. நோயை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் திணறி வருகின்றன.

    Severe case of COVID-19 has functions of his lungs recovered in Wuhan

    ஆனால் சீனா கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி உள்ளது. அங்கு அண்மைக்காலமாக யாரும் இறக்கவில்லை. அத்துடன் வெளிநாடுகளில் இருந்தவர்கள் மட்டுமே கொரோனா பாதிப்புடன் இருக்கிறார்கள்.உள்ளூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அங்கு இயல்பு நிலை திரும்பி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல் தான் கடுமையாக பாதிப்புக்கு அப்படி நுரையீரலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைப்பது கடினம் ஆகும்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஹூ என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் ஹூபே மாகணத்தில் உள்ள வுகானில் உள்ள நுரையீரல் சிறப்பு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். கடுமையா நுரையூரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ECMO இயந்திரத்தை பயன்படுத்தி சிகிச்சை அளித்தனர்.

    தொடர்ந்து பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முற்றிலும் குணமடைந்தார். இதையடுத்து அவரது உடலில் இருந்து இசிஎம்ஒ கருவியை அகற்றி அவரை மருத்துவர்கள் பரிசோதித்தார்கள். அவர் தற்போது நலமுடன் உள்ளார். மரணத்ததை தொட்டவரை உயிர் பிழைக்க வைத்தது தொடர்பான புகைப்படங்களை சீனாவில் இருந்து வெளியாகும் ஷின்குவா ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    English summary
    Medical staff take off the ECMO machine used to support senior Hu's lungs at the Wuhan pulmonary hospital in Wuhan, capital of central China's Hubei Province, April 5, 2020
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X