For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக்ஸ் மூலமும் பரவும் ஜிக்கா வைரஸ்- அமெரிக்கரை தாக்கியது

By Siva
Google Oneindia Tamil News

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உடலுறவு மூலம் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஜிக்கா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் தான் ஏராளமானோர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள பெரிய மாநிலமான டெக்சாஸில் இருக்கும் டல்லாஸ் கவுன்ட்டியில் ஒருவருக்கு உடலுறவு மூலம் ஜிக்கா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Sexually transmitted Zika case confirmed in Texas

வெனிசுலாவுக்கு சென்று ஜிக்கா வைரஸ் தாக்கப்பட்ட ஒருவர் மூலம் அந்த நபருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என்று டல்லாஸ் கவுன்ட்டி தெரிவித்துள்ளது. ஆனால் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நபர் கர்ப்பணியா, வெனிசுலாவுக்கு சென்று வந்தவர் ஆணா, பெண்ணா என்பதை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் மூலம் அவரது மனைவிக்கு ஜிக்கா வைரஸ் பரவியது. மேலும் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றொருவரின் விந்தணுவில் வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் சுமார் 40 லட்சம் பேர் ஜிக்கா வைரஸால் தாக்கப்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜிக்கா வைரஸை பரப்பும் கொசு கர்ப்பணிகளை கடித்தால் அவர்களின் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும்.

இந்த காரணத்தால் வைரஸ் பரவும் நாடுகளில் உள்ள பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

English summary
Dallas county in Texas reported a case of Zika virus transmitted through sexual relationship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X