For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மசூத் அசார் எங்க நாட்டில இருக்காரு.. ஆனா.. உடம்பு சரியில்ல… மழுப்பலாக அறிவித்த பாகிஸ்தான்

Google Oneindia Tamil News

Recommended Video

    மசூத் அசார் குறித்து மழுப்பலாக அறிவித்த பாகிஸ்தான் அரசு- வீடியோ

    இஸ்லாமாபாத்:ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருப்பதாகவும், ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த மாதம் 14ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய விமானப்படையினர் ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்தனர்.

    Shah mahmood qureshi admits masood azhar in pakistan and claims unwell

    அதுதவிர... அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரையும், அந்த இயக்கத்தையும் சர்வதேச அரங்கில் தடை செய்யும் முயற்சியில் இந்தியா தீவிரமாக இறங்கி இருக்கிறது. இந்நிலையில், மசூத் அசார் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசார் தான் காரணம் என்று இந்தியா கூறி வருகிறது. அதனை இந்தியா நிரூபிக்க வேண்டும்.

    [Read more: இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன்.. பாக். ராணுவ பாதுகாப்புடன் வாகா வருகிறார்!]

    அப்படி நிரூபித்தால் தக்க நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். அமைதியை நிலைநாட்ட இந்திய அரசு எதை செய்தாலும் பாகிஸ்தான் ஏற்கும். அதற்கு உறுதுணையாக நின்று செயல்படும்.

    மசூத் அசாருக்கு இப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்று குரேஷி பகிரங்கமாக தெரிவித்தார்.

    English summary
    Pakistan Foreign Minister Shah Mahmood QureshiAdmits JeM Chief Masood Azhar is in Country, But Claims He is Very Unwell.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X