For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாத்தா மடியில் உட்கார்ந்து இந்தியாவின் பெருமையை தெரிந்து கொண்ட ஜப்பான் பிரதமர்

By Siva
Google Oneindia Tamil News

டோக்கியோ: தனது தாத்தாவும், ஜப்பானின் முன்னாள் பிரதமருமான நொபுசுகே கிஷி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பற்றி பெருமையாக கூறியதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்படும் மரியாதையை பார்த்து அவர் வியந்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், இந்தியா இடையேயான உறவு இன்று நேற்று அல்ல கடந்த 1957ம் ஆண்டில் இருந்தே பலமாக உள்ளது.

ஷின்சோ

ஷின்சோ

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விருந்தோம்பலை விவரிக்க வார்த்தைகளே இல்லை என மோடி தெரிவித்துள்ளார். இந்த ஷின்சோ அபேயின் தாத்தா நொபுசுகே கிஷியும் ஒரு காலத்தில் ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவனிப்பு

கவனிப்பு

ஷின்சோ அபே மோடியை பார்த்து பார்த்து கவனிக்கிறார். முன்னதாக அவரது தாத்தா 1957ம் ஆண்டு மே மாதம் இந்தியா வந்தபோது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கிஷிக்கு ராஜ மரியாதை அளித்து கவனித்தார்.

தாத்தா மடியில்

தாத்தா மடியில்

அபே சிறு குழந்தையாக இருக்கையில் அவரது தாத்தா கிஷி அவரை தூக்கி தனது மடியில் வைத்து, தான் இந்தியா சென்றபோது ஜவஹர்லால் நேரு தன்னை 1 லட்சம் பேர் முன்னிலையில் பெருமையாக அறிமுகப்படுத்தியதாக கூறி நெகிழ்ந்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்றம்

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து வைத்து நடந்த கூட்டத்தில் பேசிய முதல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆவார்.

காரணம்

காரணம்

இந்தியா தனது தாத்தா காலத்தில் இருந்து ஜப்பானை கௌரவித்து வருவதால் அவரும் மோடியை அவரே அசரும் வகையில் கவனித்து இந்தியாவை கௌரவப்படுத்துகிறார்.

English summary
Japan PM Shinzo Abe's grand father cum former PM Nobusuke Kishi told him about how his Indian counterpart Nehru treated him when he visited India in 1957.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X