For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்... நிலக்கரி சுரங்க விபத்தில் 19 பேர் பரிதாப பலி

Google Oneindia Tamil News

பீஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது, சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து விழுந்தது.

Shocking incident in China, 19 peoples death in coal mine

இந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் மீட்புக் குழுவினர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் சிக்கிய 2 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இதே போல், கடந்த மாதம் 28-ம் தேதி சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டம் லோங்யான் பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த பெரும் துயரம் அடங்குவதற்குள் 19 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து ஏற்படும் நிலக்கரி சுரங்கத்தின் விபத்துக்கள் சுரங்க பணியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
19 people died in China's coal mine crash . More than 66 people were rescued by the rescue crew.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X