For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிற ஆண்கள் தொட்டு காப்பாற்றக் கூடாது: மகள் நீரில் மூழ்கி பலியானதை வேடிக்கை பார்த்த தந்தை

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: பிற ஆண்கள் தொட்டு தூக்கி காப்பாற்றுவதை விரும்பாத தந்தை ஒருவர் தனது மகள் நீரில் மூழ்கி இறப்பதை வேடிக்கை பார்த்துள்ளார்.

ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். துபாயில் உள்ள கடற்கரைக்கு அவர்கள் சென்றனர். அப்போது அவரின் 20 வயது மகள் கடலில் நீச்சல் அடித்தார். அவர் திடீர் என அவர் நீரில் மூழ்கத் துவங்கினார். உடனே தன்னை காப்பாற்றுமாறு உதவி கேட்டு அந்த பெண் அலறினார்.

தனது மகளை பிற ஆண்கள் தொட்டு தூக்கி காப்பாற்றுவதை அந்த நபர் விரும்பவில்லை. இதனால் அந்த பெண் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

இது குறித்து துபாய் போலீஸ் அதிகாரி அகமது பர்கிபா கூறுகையில்,

அந்த பெண்ணை காப்பாற்றச் சென்ற மீட்பு படையினரை அவரின் தந்தை தடுத்து நிறுத்திவிட்டார். என் மகளை பிற ஆண்கள் தொடக் கூடாது என்று கறாராக கூறினார். இதற்கிடையே அந்த பெண் நீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்றார்.

துபாய் போலீசார் பலியான பெண்ணின் தந்தையை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An Asian man got arrested in Dubai for letting his 20-year old daughter to drown in the sea rather than getting rescued by strange men.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X