
பயங்கரம்.. பைக்கில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள்.. அலறிய பர்கினோ பாசோ.. 22 பேர் பரிதாப பலி
காங்கோ: ஆப்பிரிக்காவின் பர்கினோ ஃபாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில், 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலமாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறைகள் வெடித்து கிளம்பி உள்ளன.. அதிலும் சில முக்கிய பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது.
இதற்கு காரணம், இந்த பயங்கரவாதிகளுக்கு மத அடிப்படையிலான அரசை நிறுவ வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம்.. அதற்காக அங்குள்ள அரசு படைகளுடன் நேரடியாக சண்டையிட்டு வருகின்றனர்...
கண்ணிமைக்கும் நேரத்தில்.. ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் துப்பாக்கி சூடு.. பலர் பலி: டென்மார்க்கில் பயங்கரம்

பர்கினோ ஃபாசோ
இந்த சமயத்தில் அப்பாவி பொதுமக்கள் என்றெல்லாம் யாரையுமே பார்ப்பதில்லை. சரமாரியாக கொன்று குவித்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.. குறிப்பாக கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களை குறிவைத்தே இந்த கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன... இப்போது ஆப்பிரிக்க கண்டத்தில் மேலும் ஒரு பயங்கரம் நடந்துள்ளது.. அங்கு அமைந்துள்ள நாடு பர்கினோ ஃபாசோ... நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளதுதான் இந்த பர்கினோ ஃபசோ...

பயங்கரவாதிகள்
இந்த நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதலே போகோஹரம், ஐஎஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.. அப்பாவி பொதுமக்களையும் குறி வைத்து கொன்று வருகின்றனர்.. இந்த பயங்கரவாத குழுக்களை, எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்... இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது..

துப்பாக்கி சூடு
அந்த வகையில், பர்கினோ ஃபாசோவின் வடக்குப் பகுதியில், அதாவது, கோஷி மாகாணத்தின் போர்ஸோ நகரில் உள்ள கிராமத்திற்கு நேற்று முன்தினம் சில பயங்கரவாதிகள் வந்துள்ளனர்.. பைக்குகளில் வந்திருக்கிறார்கள்.. பைக்கில் உட்கார்ந்து கொண்டே, கையில் துப்பாக்கியுடன் வந்திறங்கினார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில், காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்..

அலறி ஓடினர்
இதனால், அங்கிருந்த அனைவரும் அலறியடித்து கொண்டே ஓட்டம் பிடித்தனர்... இந்த தாக்குதலில் இதுவரை மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத குழுக்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எந்த நேரம் கலவரம் ஏற்படலாம் என்பதால், அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.. இந்த திடீர் துப்பாக்கி சூடு விசாரணை கையில் எடுக்கப்பட்டுள்ளது.