For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீ பிடித்த எஞ்சின்.. வேகமாக கீழே விழுந்த ஈரான் விமானம்.. வெடித்து சிதறிய அந்த நொடி.. ஷாக்கிங் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரான் விமான விபத்து பதற வைக்கும் ஷாக்கிங் காட்சிகள். - வீடியோ

    டெஹ்ரான்: ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளாகும் முன் தீ பிடித்தபடி பறந்த காட்சி இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி உள்ளது .

    ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 170 பேரும் பலியானார்கள்.

    டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது. இது உக்ரைன் நாட்டு விமானம் ஆகும். விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்கிறார்கள்.

    என்ன வீடியோ

    என்ன வீடியோ

    இந்த நிலையில் இந்த விமான விபத்து எப்படி நடந்தது என்று வீடியோ வெளியாகி உள்ளது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த நபர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். எஞ்சின் தீ பற்றி எரிந்து அப்படியே தரையை நோக்கி வேகமாக வருகிறது. பின் கீழே விழுகிறது.

    அந்த நொடி

    விமானம் விழுந்த நொடியில் பெரிய அளவில் வெடித்து சிதறுகிறது. இந்த சம்பவம் அப்படியே வீடியோவில் பதிவாகி உள்ளது. இதன் மூலம் விமானத்தின் எஞ்சினில் பெரிய அளவில் தீ பிடித்து இருந்தது உறுதியாகி உள்ளது.

    காரணம்

    காரணம்

    ஆனால் இதற்கு காரணம் என்ன என்று இன்னும் உறுதியாகவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட பின் விமானத்தில் என்ன நடந்தது? ஏன் வெடித்து சிதறியது என்று கண்டுபிடிக்கப்படும்.

    ஏன்?

    ஏன்?

    இந்த விமான விபத்திற்கும், அங்கு நடந்து வரும் போருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருக்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

    English summary
    Shocking video of a Ukrainian airplane accident in Iran goes viral in Social Media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X