For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்து நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதிகள் கைவரிசை: லண்டன் காவல்துறை அறிவிப்பு

இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே நடைபெற்ற தாக்குதலுக்கான காரணம் தெரியும் வரை அது தீவிரவாத தாக்குதலாகவே கருதப்படும் என்று லண்டன் போலீஸார் தெரிவித்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் என்று லண்டன் போலீஸார் தெரிவித்தனர்.

லண்டனிலுள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் அங்கு 400 எம்.பி.க்கள் இருந்தனர். அப்போது அதன் அருகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவை பாதியிலேயே முடிக்கப்பட்டது.

Shot fire outside UK parliament is a terrorist attack,says London Police

இச் சம்பவத்தில் நாடாளுமன்றம் அருகே பொதுமக்கள், போலீசார் பலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நாடாளுமன்றக் காவலருக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதுகுறித்த தகவலை பிபிசி முதலில் வெளியிட்டது. துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பேலஸ் ஆப் வெஸ்ட்மின்ஸ்டர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு, தாக்குதல்காரர்கள் மீது பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என்றும் தாக்குதலுக்கான காரணம் தெரியும் வரை அது தீவிரவாதத் தாக்குதலாகவே கருதப்படும் என்று லண்டன் போலீஸார் தெரிவித்தனர்.

English summary
Shot fire outside UK parliament. London Police say they are treating it as a terrorist incident "until we know otherwise"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X