For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூசிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கி சூடு.. பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு.. 4 பேர் கைது!

Google Oneindia Tamil News

Recommended Video

    மசூதிக்குள் துப்பாக்கி சூடு : நியூசிலாந்து பிரதமர் கண்டனம் -வீடியோ

    வெலிங்டன்: நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 49 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பல பேர் பலியாகி இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வருகிறது.

    நியூசிலாந்தின் மையப்பகுதி என்று சிறப்பு பெயர் கொண்ட இடம்தான் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச். நியூசிலாந்தில் உள்ள இந்த சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் இடம் உலக புகழ்பெற்றது.

    இதன் அருகிலேயே சென்ட்ரல் கிறிஸ்ட் பள்ளி, சென்ட்ரல் கிறிஸ்ட் மருத்துவமனை, மசூதி என்று வரிசையாக பல கட்டிடங்கள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு.. மயிரிழையில் தப்பித்த வங்கதேச கிரிக்கெட் டீம்.. பரபரப்பு! நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு.. மயிரிழையில் தப்பித்த வங்கதேச கிரிக்கெட் டீம்.. பரபரப்பு!

    300 பேர்

    300 பேர்

    ராணுவ ஜாக்கெட் போல உடை அணிந்து இருந்த அவர்கள் சர்ச்சில் இருந்த மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்திய நேரப்படி காலை 8.15 மணி அளவில் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலின் போது மசூதியில் 300 பேர் இருந்துள்ளனர்.

    எத்தனை மணி நேரம்

    எத்தனை மணி நேரம்

    துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் அதே பகுதியில் சுமார் 2.30 மணி நேரம் சுற்றி வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது தொடக்கத்தில் தெரியவில்லை. தற்போது இதில் சிலரை நியூசிலாந்து போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    இந்த தாக்குதலில் 49 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பல பேர் பலியாகி இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வருகிறது. 50க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்ட முக்கியமான நபரை கைது செய்துவிட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

     வெடிகுண்டும் இருக்கிறது

    வெடிகுண்டும் இருக்கிறது

    துப்பாக்கி சூடு நடந்த மசூதிக்கு வெளியில் இருக்கும் கார் ஒன்றில் மூன்று வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.இதனால் தற்போது அந்த மத்திய பகுதியில் இருந்து போலீசார் மக்களை வெளியேற்றி வருகிறார்கள். ஹெலிகாப்டர் மூலம் அந்த கொலைகாரனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    Active shooter situation at New Zealand mosque, 6 people dead, more casualties feared
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X