For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துருக்கியில் சிக்கிய இரட்டைத் தலை சயாமிஸ் டால்பின்!

Google Oneindia Tamil News

Siamese fins! Body of two-headed DOLPHIN washes up on Turkish beach
அங்காரா: துருக்கியில் இரட்டை தலைகள் கொண்ட இறந்த நிலையில் ஒரு டால்பின் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

ஒரு உடல், இரண்டு தலைகளுடன் கூடிய இந்த சயாமிஸ் டுவின்ஸ் டால்பின் மிகவும் அரிதானது. துருக்கியின் மேற்குக் கரை நகரமான இஸ்மில் என்ற நகரின் கடலோரத்தில் இது மிதந்து வந்தது.

துக்ருல் மெடின் என்ற விளையாட்டு ஆசிரியர் இதைப் பார்த்து தகவல் தெரிவிக்கவே மீட்புப் படையினர் விரைந்து வந்தனர்.

இந்த டால்பினுக்கு ஒரு வயது இருக்கும். 3.2 அடி நீளமே உள்ளது. இரண்டு தலைகள், ஒரு உடல், வாலுடன் இது காணப்பட்டது.

இந்த டால்பினை தற்போது ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர். இந்த டால்பினின் இரு தலைகளும் சரியான முறையில் இல்லை. இதுகுறித்து அட்டெனிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மெஹமத் கோகோக்லு கூறுகையில், இது மிகவும் வினோதமாக உள்ளது. இதை ஆய்வு செய்து வருகிறோம். இப்படிப்பட்ட டால்பின்கள் இருப்பது மிக மிக அரிதானதாகும் என்றார்.

English summary
The body of a two-headed dolphin has washed up on a beach in Turkey this week. The conjoined corpse was seen floating onto the shore in Izmir on Turkey's west coast on Monday by sports teacher Tugrul Metin. The dead dolphin was believed to be a one-year-old calf measuring just 3.2ft in length.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X