For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்லான்டோ துப்பாக்கிச்சூடு: உயிர் பயத்தில் அமெரிக்க வாழ் சீக்கியர்கள்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆர்லான்டோ துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள் பயத்தில் உள்ளனர்.

அமெரிக்காவில் முஸ்லீம்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தினால் அங்கு வசிக்கும் சீக்கியர்களை இஸ்லாமியர்கள் என தவறாக நினைத்து தாக்கிய சம்பவங்கள் பல முறை நடந்துள்ளது. இந்நிலையில் புளோரிடோ மாகாணம் ஆர்லான்டோ நகரில் இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்கள் கிளப்புக்குள் நுழைந்த உமர் மாட்டீன் கண்மூடித்தனமாக சுட்டதில் 50 பேர் பலியாகினர்.

Sikh-Americans Fear Backlash After Orlando Shooting

இந்நிலையில் அந்த தாக்குதலுக்கு பழிவாங்க தங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடுமோ என அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள் பயத்தில் உள்ளனர். இந்நிலையில் சீக்கியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வாக்குறுதி அளித்துள்ளார்.

வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் உள்ள குருத்வாராவுக்கு சென்று அங்கு கூடியிருந்த சீக்கியர்களிடம் எதையும் நினைத்து பயப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியுள்ளார்.

இது குறித்து சீ்க்கிய அமைப்பின் தலைவர் பரம்வீர் சிங் சோனி கூறுகையில்,

ஆர்லான்டோ சம்பவத்தை அடுத்து சீக்கியர்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என ஒபாமா அறிவித்துள்ளது மிகவும் ஆறுதலாக உள்ளது என்றார்.

English summary
Sikh-Americans, who have faced hate crimes after every major terror attack, are fearing a backlash following the Orlando gay club shooting even as the Obama administration has assured them of their safety.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X