For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிருக்கு முன் மதம் பெரிதில்லை – டர்பனைக் கழற்றி உதவியவருக்கு குவியும் பரிசுகள்

Google Oneindia Tamil News

வெலிங்டன்: நியூசிலாந்தில் விபத்து ஒன்றில் சிக்கிய 6 வயது குழந்தையைக் காபபாற்றுவதற்காக தனது மத கொள்கைகளை பற்றி கவலைப்படாமல் தனது தலைப்பாகையை பயன்படுத்தி உதவி செய்த சீக்கிய மாணவர் ஹர்மான் சிங்குக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமாக உள்ளன.

டேஜோன் பாஹியா என்ற 6 வயது சிறுவன் கார் மோதி சாலையில் அடிப்பட்டு கிடப்பதைக் கண்ட ஹர்மான் சிங் உடனே தனது தலைpபாகையை கழற்றி ரத்தம் வழியும் அக்குழந்தையின் தலையை அதன் மூலம் தாங்கிப் பிடித்தார்.

Sikh who removed turban to help wounded boy gets 'biggest surprise' of his life

பின்னர் துணை மருத்துவக் குழுவின் முதல்கட்ட சிகிச்சைக்குப் பின் அச்சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

இந்நிலையில் குழந்தையின் தலையை தலைப்பாகை மூலம் தாங்கிப்பிடித்துள்ள ஹர்மான் சிங்கின் புகைப்படம் உலகம் முழுவதும் பரவியது.

மேலும் தொலைக்காட்சி செய்திகளிலும் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து நியூசிலாந்தின் தொலைக்காட்சி ஒன்று ஹர்மான் சிங்கை பேட்டி எடுத்தது.

அப்போது அவரது வீட்டில் பர்னிச்சர் இல்லாததும், ஹர்மான் சிங் தரையில் பாய் போட்டு உறங்குவது தெரிய வந்தது. இதனை அடுத்து அத்தொலைக் காட்சி நிறுவனம் பர்னிச்சர் நிறுவனம் ஒன்றினை அணுகி ஹர்மான் சிங் வீட்டுக்கு பர்னிச்சர்களை இலவசமாக வழங்கியுள்ளது.

English summary
Harman Singh, the 22-year-old Sikh man living in New Zealand who broke religious protocol by removing his turban to cradle a boy hit by a car, was pleasantly surprised when he received a gift from a furniture chain store recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X