For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னேறு வாலிபா... தமிழில் தேசிய கீதத்தை மொழிபெயர்த்த தமிழருக்கு சிங்கப்பூர் அரசு பாராட்டு

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்த தமிழ் ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்துள்ளது சிங்கப்பூர் அரசு.

சிங்கப்பூரில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. இங்கு முன்னேறு வாலிபா என தொடங்கும் தமிழ் பாடல் தேசிய கீதமாக உள்ளது. கடந்த 1967ம் ஆண்டு முதல் சிங்கபூரில் உள்ள பள்ளிகளிலும், அந்த நாட்டின் தேசிய அணிவகுப்பின் போதும் இந்த பாடல் பாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக சீனா மற்றும் மலேயா மாணவர்களும் இந்த பாடலை விரும்பி பாடுகி்ன்றனர். இதனை ஜேசுதாசன் என்ற தமிழ் ஆசிரியர் இயற்றியுள்ளார்.

1966ல் ரேபில்ஸ் இன்ஸ்டிடியூஷன் என்ற பள்ளியில் அவர் பணியாற்றிய போது தமிழர்களுக்காக தமிழில் தேசிய கீதத்தை இயற்றும்படி அப்பள்ளி முதல்வர் அவரிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று கொண்ட தமிழ் ஆசிரியர் ஜேசுதாசன் முன்னேறு வாலிபா என்ற பாடலை எழுதினார்.

45 ஆண்டு காலமாக தமிழ் ஆசிரியராக இருந்த அவர் அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தற்போது அவருக்கு 84 வயது ஆகிறது. அவரை கவுரவிக்கும் விதமாக சிங்கபூர் அரசு பாராட்டு விழா நடத்தியுள்ளது.

English summary
The Singapore government honored and felicitated 84 years old Jesudasan, who translated the national anthem in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X