For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டு பணியாளர்களுக்காக ஊருக்கு வெளியே பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கும் சிங்கப்பூர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: வெளிநாட்டில் இருந்து வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காக நகருக்கு வெளியே பொழுதுபோக்கு மையங்களை திறக்க உள்ளது சிங்கப்பூர் அரசு.

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி நடந்த கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தநாட்டு வரலாற்றில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த கலவரம் நடந்ததால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ெடுக்க தொடங்கியுள்ளது சிங்கப்பூர்.

singapore

அதன் ஒருபகுதியாக நகருக்கு வெளியே பொழுதுபோக்கு மையங்களை அமைக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், சிங்கப்பூர் நகருக்குள் மக்கள் நெருக்கம் குறைந்து வன்முறை வெடிக்கும் வாய்ப்பு கட்டுப்படும் என்று அன்நாட்டு அரசு நம்புகிறது.

இதற்காக பல கோடி செலவிட்டு பொழுதுபோக்கு மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுல்ளதாக சிங்கப்பூர் நாட்டின் மனித வள அமைச்சர் டான் சுவான்-ஜின் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதமே இவர் இதை தெரிவித்திருந்த நிலையில், இப்போது அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்துவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை 54 லட்சம். அதில் 38 லட்சம்பேர் அந்நாட்டின் குடிமக்கள், அல்லது, நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள்.

எனவே வெளிநாட்டில் இருந்து வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்காக பொழுது போக்கு மையங்கள் நகருக்கு வெளியே அமைக்கப்படுகின்றன.

English summary
Singapore plans to build more recreation centres in its suburbs to draw migrant labourers away from the city after a rare riot in the congested Little India district last year, a report said.
 The multi-million dollar centres are the latest in a series of government measures to manage better areas where foreign workers congregate after the rampage by South Asian labourers on December 8.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X