For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகி நூடுல்ஸ் சத்தானது: ஆய்வுக்கு பிறகு தடையை நீக்கியது சிங்கப்பூர்!!

By Siva
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: மேகி நூடுல்ஸில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் இல்லை என்று உணவுத் துறை அதிகாரிகள் சான்று அளித்ததை அடுத்து சிங்கப்பூரில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

மேகி நூடுல்ஸில் உடல் நலத்திற்கு கேடு விளைக்கும் ஈயம் மற்றும் மோனோசோடியம் க்ளூட்டமேட் அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மேகிக்கு சிங்கப்பூரிலும் தடை விதிக்கப்பட்டது.

Singapore resumes sale of Maggi noodles

சிங்கப்பூரின் வேளாண் உணவு மற்றும் கால்நடை அதிகார ஆணையம் நடத்திய ஆய்வில் மேகி நூடுல்ஸில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

மேகி நூடுலஸ் உணவு பாதுகாப்பு தரத்திற்கு ஏற்றவகையில் உள்ளதால் அதை விற்பனை செய்யலாம் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் நடத்தப்பட்ட ஆய்வில் மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம், மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவும், சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவும் வித்தியாசமாக உள்ளது.

English summary
Singapore has allowed the sale of Maggi noodles manufactured in India after safety tests by food authorities found that the popular instant snack does not pose any health risk to consumers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X