For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர் நாதன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர் நாதன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, கவலைகக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர் முன்னாள் அதிபரான எஸ்.ஆர்.நாதன் (92). 1999-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை இருமுறை தொடர்ந்து அதிபர் பதவி வகித்தார். தமிழரான இவரது இயற்பெயர் செல்லப்பன் ராமநாதன். அந்நாட்டு அதிபராக அதிக காலம் இருந்தும் அவர்தான்.

Singapore's former president SR Nathan in critical condition

மூன்றாவது முறையாக அவர் போட்டியிடாமல், 2011-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி பதவி விலகினார். சிங்கப்பூரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய பெருமைக்கு உரியவர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது, இதையடுத்து, சிகிச்சை பெற்ற அவர் மீண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை அவருக்கு மீண்டும் பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Former Singapore President S.R. Nathan has suffered a stroke and is in critical condition, the Prime Minister's office said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X